3500 எம்ஏஹெச் பேட்டரியுடன் அசத்த வரும் ரியல்மி யு1.!
இந்நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ரியல்மி யு1 என்ற போனை அறிமுகம் செய்ய இருகின்றது. இதுகுறித்து அதன் விவரங்களை பார்க்கலாம்.
ஓப்போ நிறுவனத்தின் துணை நிறுவனமாக ரியல்மி நிறுவனம் இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் போன்களும் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றது.

ஸ்மார்ட் போன்களில் விதவிதமாகவும் புதிய அம்சங்களையும் புகுத்துவதில், ரியல்மி நிறுவனம் தனிச்சிறப்பாக இருக்கின்றது. பல்வேறு வசதிகளையும் ரியல்மி நிறுவனம் குறைந்த விலையில் அசத்தி வருகின்றது.
இந்நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ரியல்மி யு1 என்ற போனை அறிமுகம் செய்ய இருகின்றது. இதுகுறித்து அதன் விவரங்களை பார்க்கலாம்.

ரியல்மி யு1:
யு1 ஸ்மார்ட்போன் மாடலை ரியல்மி அறிமுகம் செய்ய இருக்கிறது. நவம்பர் 28ம் தேதி புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

3500 எம்ஏஹெச் பேட்டரி:
அதன்படி புதிய ரியல்மி யு1 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, 13 எம்.பி. + 2 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா சென்சார், 25 எம்.பி. செல்ஃபி கேமரா, 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்:
டூயல் சிம் ஸ்லாட், ஆன்ட்ரய்டு 8.1 ஓரியோ, 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
- 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, ஏ.ஐ., சோனி IMX576 சென்சார், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றன.

யு1 விலை:
ரியல்மி யு1 ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,999. முன்னதாக ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸ் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications