இன்று: 25எம்பி செல்பீ கேம் உடன் ரூ.11, 999 விலையில் விற்பனைக்கு வரும் ரியல்மி யூ1.!
இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் தயாரிப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி மீடியாடெக் ஹெலியோ பி70 ஆக்டோ-கோர் சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது
இந்திய சந்தையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ரியல்மி யூ1 ஸ்மார்ட்போன் மாடல் இன்று மதியம் 12மணி அளவில் அமேசான் மற்றும் ரியல்மி இணையதளங்களில் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அதிநவீன
தொழில்நுட்பங்கள் கொண்டு பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தகக்து.

மேலும் ஜியோ நிறுவனம் சார்பாக கேஷ்பேக் மற்றும் டேட்டா சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது, அதேபோன்று தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் உடனடி கேஷ்பேக் வழங்கப்படும் என்று ரியல்மி நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி யூ1:
ரியல்மி யூ1 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 19:5:9 என்ற திரைவிகதிம் மற்றும் 1080x2340 பிக்சல் திர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது, குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

செயலி:
இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் தயாரிப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி மீடியாடெக் ஹெலியோ பி70 ஆக்டோ-கோர் சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தகக்து.

சேமிப்பு:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் கைரேனை சென்சார், பேஸ் அன்லாக் வசதி போன்ற பல்வேறு ஆதரவுகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

கேமரா:
ரியல்மி யூ1 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 16எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு 25எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. எனவே மிகத்துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இந்த ஸ்மார்ட்போனின் மூலம் எடுக்க முடியும்.

பேட்டரி:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 3500எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு வைஃபை, ப்ளூடூத், மைக்ரோ யுஸ்டி-போர்ட், ஒடிஜி ஆதரவு, 3.5எம்.எம் ஆடியோ ஜாக், ஜிபிஎஸ் மற்றும் பல்வேறு சென்சார் ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

விலை:
3ஜிபி ரேம் கொண்ட ரியல்மி யூ1 ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,999-ஆக உள்ளது.
4ஜிபி ரேம் கொண்ட ரியல்மி யூ1 ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,499-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications