Home
Mobile

பெரிஸ்கோப் ஜும்.. பட்ஜெட் விலை.. மிரட்டலான ஸ்மார்ட்போன் ரெடி.. அதிரடி காட்டும் ரியல்மி.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ரியல்மி நிறுவனம் புதிய டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த டீசரில் பெரிஸ்கோப் லென்ஸுடன் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய போன் ரியல்மி ஜிடி 5 ப்ரோ-ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ரியல்மி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ள புதிய போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

பெரிஸ்கோப் ஜும்.. பட்ஜெட் விலை.. அதிரடி காட்டும் ரியல்மி.. எந்த மாடல்?

குறிப்பாக ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியச் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ரியல்மி நிறுவனம் சமீபத்தில் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்த ரியல்மி சி53 ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி சி53 அம்சங்கள் (Realme C53 Specifications): இந்த போன் 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் வரும் டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. 8 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது. இந்த கேமராவில் டைம் லேப்ஸ், போர்ட்ராய்ட் மோட், எச்டிஆர் மோட், ஏஐ சீன் ரெககனைசேஷன், ஸ்லோவ் மோஷன், போக்கே எஃபெக்ட் கன்ட்ரோல், 3எக்ஸ் ஜூமிங் சென்சார் அம்சங்கள் இருக்கிறது.

ரியல்மி சி53 போன் 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட், 560 பீக் பிரைட்னஸ் வருகிறது. குறிப்பாகப் பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது, அதேபோல் இந்த டிஸ்பிளேவில் எச்டி பிளஸ் ஆதரவு உள்ளது. எனவே இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்

ஆண்ட்ராய்ட் 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ரியல்மி யுஐ டி எடிஷன் ஓஎஸ் (Realme UI T Edition OS) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி612 (Octa-Core UNISOC T612) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு மாலி - ஜி57 ஜிபியு (Mali-G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. மேலும், சைடு மவுண்டெட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint sensor), 3.5 மிமீ ஆடியோ ஜாக், பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர், டூயல் 4ஜி சிம் சப்போர்ட், ப்ளூடூத் 5, டைப் - சி போர்ட் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கின்றன. குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.

பெரிஸ்கோப் ஜும்.. பட்ஜெட் விலை.. அதிரடி காட்டும் ரியல்மி.. எந்த மாடல்?

ரியல்மி சி53 போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்டை ரூ.9,999 விலையில், இதன் 6ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்ட வேரியண்டை ரூ.10,999-க்கு வாங்க முடியும். குறிப்பாக இந்த போனில் மெரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. அதேபோல் 108எம்பி கேமரா, தரமான சிப்செட், பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த 4ஜி போன் வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம்.

குறிப்பாக சியோமி, விவோ, மோட்டோ நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் தரமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது ரியல்மி நிறுவனம். மேலும் இந்த ஆண்டு இறுதியில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய உள்ளது ரியல்மி நிறுவனம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme To Launch New Smartphone With Periscope Camera Soon: Teaser Released: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X