Home
Mobile

15,000mAh Battery உடன் புது போன்.. மொத்த மொபைல் மார்க்கெட்டும் மிரண்டு போச்சு.. எந்த கம்பெனி போன்?

ரியல்மி நிறுவனம் வருகிற ஆகஸ்ட் 27 ஆம் தேதி அன்று அதன் 10000எம்ஏஎச்+ பேட்டரி ஸ்மார்ட்போனை (Realme 10000mAh+ Battery Smartphone) அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்த நிலையில்.. தன்னுடைய அடுத்த ஸ்மார்ட்போன் ஆனது எந்த அளவிலான "பிக் பேட்டரியை" கொண்டிருக்கும் என்பது குறித்த விவரங்களை வெளிப்படுத்தியுள்ளது

ரியல்மி வெளியிட்டுள்ள ஒரு புதிய டீஸரில், தனது நிறுவனத்தின் வரவிருக்கும் ஸ்மார்ட்போன் ஒன்று 15000எம்ஏஎச் பேட்டரியை (Realme 15000mAh Battery Smartphone) கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது. குறிப்பிட்ட டீஸரில் உள்ள ஸ்மார்ட்போனின் பேக் கவரில் 15000mAh என்கிற வாசகத்தை காண முடிகிறது.

15,000mAh Battery உடன் புது போன்.. Realme ருத்ர தாண்டவம்!

15000mAh பேட்டரி என்பது - இப்போதைக்கு மொபைல் மார்க்கெட்டில் உள்ள பெரும்பாலான ரக்டு போன்களை (Rugged Phones) விட உண்மையிலேயே மிகப்பெரிய பேட்டரி கெப்பாசிட்டி ஆகும். மேலும் பொதுவாக ரக்டு ஸ்மார்ட்போன்கள் ஆனது அவற்றின் பெரிய பேட்டரிகளுக்கு ஏற்றவாறு பருமனான வடிவமைப்புகளுடன் வரும்.

ஆனால் ரியல்மி வெளியிட்டுள்ள டீஸர் படத்தில் காணப்படும் ரியல்மியின் 15000எம்ஏஎச் ஸ்மார்ட்போன் ஆனது வழக்கத்திற்கு மாறாக சற்றே மெலிதான வடிவமைப்பை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனால் 50 மணிநேர இடைவிடாத வீடியோ ஸ்ட்ரீமிங்கை வழங்க முடியும் என்றும் ரியல்மி நிறுவனம் கூறுகிறது. இது "காட்டுத்தனமாக" தெரிந்தாலும், 15000எம்ஏஎச் என்கிற திறனை கருத்தில் கொண்டால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை!

ரியல்மி நிறுவனத்தின் இந்த 15000mAh பேட்டரி ஸ்மார்ட்போன் ஆனது திடீரெனெ வந்துடவில்லை. கடந்த மே மாதத்தில், இந்நிறுவனம் 10,000mAh பேட்டரியுடன் கூடிய ரியல்மி ஜிடி கான்செப்ட் போனை அறிமுகப்படுத்தியது. இது தொழில்துறையின் மிக உயர்ந்த 10% சிலிக்கான் விகிதத்தையும் 887Wh/L ஆற்றல் அடர்த்தியையும் கொண்டுள்ளது.

இதன் விளைவாக, ரியல்மி ஜிடி கான்செப்ட் போன் ஆனது மிகவும் தடிமனாகவோ அல்லது கனமாகவோ இல்லை. இது 8.5 மிமீ அளவை கொண்டுள்ளது மற்றும் 200 கிராமுக்கு சற்று அதிகமாக எடையுள்ளதாக இருக்கிறது. ஆக வரவிருக்கும் 15,000mAh பேட்டரி ஸ்மார்ட்போனிலும் நாம் அதே சிலிக்கான்-அனோட் வேதியியலை எதிர்பார்க்கலாம்

ஆனால் இங்கே எழும் உண்மையான கேள்வி என்னவென்றால், ரியல்மி நிறுவனம் எப்படி இவ்வளவு பெரிய பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை ஒரு சாதாரண ஸ்மார்ட்போனாக தோற்றமளிக்கும் வகையில் பொருத்துகிறது என்பதுதான். 10,000mAh மாடலைப் போலவே, இதுவும் மற்றொரு கான்செப்ட் போன் ஆக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ஒருவேளை ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரும் 10000எம்ஏஎச்+ பேட்டரி மாடல் ஆனது இதுவாக கூட இருக்கலாம். ஏனென்றால் இதுகுறித்த டீசரில் ரியல்மி நிறுவனம் 1X000எம்ஏஎச் பேட்டரி என்று தான் குறிப்பிட்டுள்ளது. ஆக அந்த X-ல் 5 என்கிற எண் பொறுத்தப்படவும் வாய்ப்புள்ளது. காத்திருந்து பார்ப்போம் என்ன வருகிறது என்று.. ஆனால் நிச்சயமாக ஸ்மார்ட்போன் சாம்பிராஜ்யத்தையே அசைத்துப்பார்க்கும் ஒரு ஸ்மார்ட்போன் வரப்போகிறது என்பது மட்டும் உறுதி!

ரியல்மி தொடர்பான மற்ற செய்திகளை பொறுத்தவரை சமீபத்தில் தான் இந்நிறுவனம் அதன் ரியல்மி பி4 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. ரியல்மி பி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.24,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் 8GB ரேம் + 256GB ஸ்டரோஜ் மற்றும் 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.26,999 மற்றும் ரூ.28,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

மறுகையில் உள்ள ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.18,499 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போனின் 8GB ரேம் + 128GB ஸ்டரோஜ் மற்றும் 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.19,499 மற்றும் ரூ.21,499 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Teased 15000mAh Battery Smartphone Could be Concept Phone All you Need to Know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X