நீங்கள் ரியல்மி வாடிக்கையாளரா? இதோ உங்களுக்கு ஒரு குட் நியூஸ்.! என்ன தெரியுமா?
தற்சமயம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு தொடர்ந்து VoWiFi அல்லது Wi-Fi அழைப்பு வசதி கிடைத்த வண்ணம் உள்ளது. அதன்படி கூடியவிரைவில் ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கும் VoWiFi அல்லது Wi-Fi கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை நிர்வாக அதிகாரி
மேலும் ரியல்மி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் அவர்கள் கூறுகையில் இந்த மாதத்திலிருந்து ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு இந்த வைஃபை அழைப்பு ஆதரவு கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

அதவும் இந்த மாதம் வைஃபை VoWiFi அல்லது Wi-Fi அழைப்பு ஆதரவைப் பெறும் முதல் ரியல்மி ஸ்மார்ட்போன் எதுவென்றால் ரியல்மி எக்ஸ்2 ப்ரோ என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற ஸ்மார்ட்போன்களுக்கு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்த புதிய வசதி கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எந்தெந்த மாதங்களில் ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு இந்த புதிய வசதி கிடைக்கும்என்ற பட்டியலைப் பார்ப்போம்.

ஜனவரி
ரியல்மி எக்ஸ் ப்ரோ

பிப்ரவரி
ரியல்மி எக்ஸ்2
ரியல்மி எக்டி
ரியல்மி எக்ஸ்
ரியல்மி 5ப்ரோ
ரியல்மி 3ப்ரோ
ரியல்மி 5
ரியல்மி 5ஐ
ரியல்மி 5எஸ்

மார்ச்
ரியல்மி 3
ரியல்மி 3ஐ
ரியல்மி 2ப்ரோ
ரியல்மி யு1
ரியல்மி 1
ரியல்மி 2/சி1
ரியல்மி சி2
மேலும் அன்மையில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போன்களின் அம்சங்களைப் பார்பபோம்.

ரியல்மி 5ஐ டிஸ்பிளே
ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720 x 1600 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக வாட்டர் டிராப் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

4ஜிபி ரேம்
ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்போனின் பின்புறம் 12எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்+ 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி
இந்த ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
.


Click it and Unblock the Notifications