Home
Mobile

Realme செஞ்சிட்டான்.. இன்னொரு பட்ஜெட் போன்.. 8000mAh பேட்டரி, IP69K, 8GB ரேம், 50MP கேமரா.. எந்த மாடல்?

ரியல்மி (Realme) நிறுவனமானது பேட்டரி லைஃப் மற்றும் நீடித்து உழைக்கும் தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை வியட்நாமில் அறிமுகம் செய்துள்ளது அது ரியல்மி சி100 4ஜி (Realme C100 4G) ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் தாய்லாந்தில் ரியல்மி சி100 5ஜி (Realme C100 5G) மாடல் அறிமுகமான சில நாட்களுக்கு பிறகு வருகிறது

இப்போதைக்கு இந்த 2 ஸ்மார்ட்போன்களின் இந்திய அறிமுகம் குறித்த எந்த விவரங்களும் இல்லை. அனால் பெரும்பாலும் இவைகள் இந்திய சந்தைக்கும் வரக்கூடும். ஏனென்றால் ரியல்மி நிறுவனமானது ஏற்கனவே பல வகையான சி-சீரீஸ் ஸ்மார்ட்போன்களை இங்கே அறிமுகம் செய்துள்ளது. சரி வாருங்கள், புதிதாக அறிமுகமான ரியல்மி சி100 4ஜி ஸ்மார்போனின் விலை, அம்சங்களை பற்றி பார்ப்போம்:

Realme செஞ்சிட்டான்.. இன்னொரு பட்ஜெட் போன்.. 8000mAh பேட்டரி, IP69K!

ரியல்மி சி100 4ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ஆர்மர்ஷெல் கிளாஸ் பாதுகாப்புடன் கூடிய 6.8-இன்ச் HD+ டிஸ்பிளே
- மீடியாடெக் ஹீலியோ G92 மேக்ஸ் சிப்செட்
- ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ரியல்மி UI 7.0
- 50-மெகாபிக்சல் ரியர் கேமரா
- 8-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய பெரிய 8,000mAh பேட்டரி

ரியல்மி சி100 4ஜி ஸ்மார்ட்போனின் விலை: வியட்நாமில் இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் VND 6,399,000 க்கு, அதாவது தோராயமாக இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.22,500 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது (ஆனால் நிச்சயமாக இந்திய சந்தையில் இவ்வளவு அதிக விலை இருக்காது) இந்த போன் எடர்னல் பிரவுன், ட்ரையம்ஃபல் பர்பிள் மற்றும் ஒயிட் குளோரி (வியட்நாமிய மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது) ஆகிய கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரியல்மி சி100 4ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- 6.8-இன்ச் எச்டி பிளஸ் (1570 x 720 பிக்சல்கள்) டிஸ்பிளே
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 240Hz வரையிலான டச் சாம்பிளிங்
- 1,200 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ்
- ஆர்மர்ஷெல் கிளாஸ் பாதுகாப்பு
- மீடியாடெக் ஹீலியோ G92 மேக்ஸ் சிப்செட்
- 8GB LPDDR4X ரேம் மற்றும் 256GB eMMC 5.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ரியல்மி UI 7.0

- எப்/1.8 அபெர்ச்சர் மற்றும் ஆட்டோஃபோகஸ் ஆதரவுடன் கூடிய 50-மெகாபிக்சல் ரியர் கேமரா
- நைட், போர்ட்ரெய்ட், ப்ரோ, டூயல்-வியூ வீடியோ மற்றும் அண்டர்வாட்டர் மோட் உள்ளிட்ட பல ஷூட்டிங் மோட்
- ரியர் கேமராவில் 10x டிஜிட்டல் ஜூம் வரை ஆதரவு
- 30fps வேகத்தில் 1080p வரை வீடியோக்களை பதிவு செய்யும் திறன்
- எப்/2.0 அபெர்ச்சர் கொண்ட 8-மெகாபிக்சல் செல்பீ கேமரா

- டூயல் சிம் 4ஜி, வைஃபை 5, ப்ளூடூத் 5.3, NFC, GPS மற்றும் ஒரு USB டைப்-C போர்ட்
- ப்ராக்ஸிமிட்டி சென்சார், லைட் சென்சார், இ-காம்பஸ், ஆக்சிலரோமீட்டர்
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார்
- பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக பேஸ் அன்லாக்

- 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வரை ஆதரவுடன் 8000mAh பேட்டரி
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP66, IP68, IP69 மற்றும் IP69K ரேட்டிங்
- MIL-STD-810H இராணுவ தர அதிர்ச்சி எதிர்ப்பு திறன்
- அளவீட்டில் தோராயமாக 166.48 x 78.23 x 8.63 மி.மீ தடிமன்
- எடையில் சுமார் 219 கிராம்

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Silently Launched New Budget Phone Realme C100 4G With 8000mAh Battery See Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X