தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொள்ளும் Realme.. இப்போ இந்த Phone அவசியமா?

|

ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி 10 4ஜி மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் நவம்பர் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ரியல்மி 10 4ஜி

ரியல்மி 10 4ஜி

இந்த ரியல்மி 10 4ஜி போன் ஆனது மீடியாடெக் சிப்செட் மற்றும் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்தஇந்த ரியல்மி 10 4ஜி போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

தெரிஞ்சதும் Settings-க்கு போவீங்க! இந்த 5 சீக்ரெட் அம்சங்களும் Samsung போன்களில் மட்டுமே கிடைக்கும்!தெரிஞ்சதும் Settings-க்கு போவீங்க! இந்த 5 சீக்ரெட் அம்சங்களும் Samsung போன்களில் மட்டுமே கிடைக்கும்!

256ஜிபி ஸ்டோரேஜ்

256ஜிபி ஸ்டோரேஜ்

ரியல்மி 10 4ஜி ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

கடைக்காரங்க கூட வெளிய சொல்ல மாட்டாங்க! பலருக்கும் தெரியாத ப்ளூடூத் இயர்பட்ஸ் பற்றிய 8 சீக்ரெட்!கடைக்காரங்க கூட வெளிய சொல்ல மாட்டாங்க! பலருக்கும் தெரியாத ப்ளூடூத் இயர்பட்ஸ் பற்றிய 8 சீக்ரெட்!

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

புதிய ரியல்மி 10 4ஜி ஸ்மார்ட்போன் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே, மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். ஆனால் இந்த போன் 5ஜி வசதியுடன் வெளிவந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.

1 பட்டன் கூட iPhone 15 இல் கிடையாது.! என்ன சொல்லுறீங்க? பட்டன்லெஸ் ஆக மாறுகிறதா ஐபோன்.!1 பட்டன் கூட iPhone 15 இல் கிடையாது.! என்ன சொல்லுறீங்க? பட்டன்லெஸ் ஆக மாறுகிறதா ஐபோன்.!

 5ஜி போன்கள்

5ஜி போன்கள்

அதாவது இந்தியாவில் 5ஜி போன்கள் பட்ஜெட் விலையில் வெளிவருமா என்று மக்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். ஆனால் இதுபோன்ற சமயத்தில் இப்படியொரு 4ஜி போனை அறிமுகம் செய்வது தேவையில்லாத வேலைதான். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் ரியல்மி தன் தலையில் தானே மண்ணை வாரிப் போடுகிறது.

மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி சி30எஸ்

ரியல்மி சி30எஸ்

ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 720x1,600 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சீன கம்பெனியின் பக்கா ஸ்கெட்ச்! அடுத்த 2 மாசத்துல எங்க பார்த்தாலும் இந்த 3 Phone தான் இருக்கும்!சீன கம்பெனியின் பக்கா ஸ்கெட்ச்! அடுத்த 2 மாசத்துல எங்க பார்த்தாலும் இந்த 3 Phone தான் இருக்கும்!

Unisoc SC9863A சிப்செட் வசதி

Unisoc SC9863A சிப்செட் வசதி

ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் Unisoc SC9863A சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் Realm UI Go Edition சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி ஸ்மார்ட்போன். மாடல்.

50-இன்ச், 55-இன்ச் TV-லாம் கொஞ்சம் ஓரம்போ.. Redmi-யின் 86-இன்ச் டிவி அறிமுகம்! என்ன விலை?50-இன்ச், 55-இன்ச் TV-லாம் கொஞ்சம் ஓரம்போ.. Redmi-யின் 86-இன்ச் டிவி அறிமுகம்! என்ன விலை?

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு இந்த போனில் பாஸ்ட் சார்ஜிங் வசதி இல்லை. வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத் வி4.2, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி போன்.

எல்லோரும் வாங்க நினைத்த Xiaomi Book Air 13 லேப்டாப் அறிமுகம்.! விலை என்ன தெரியுமா?எல்லோரும் வாங்க நினைத்த Xiaomi Book Air 13 லேப்டாப் அறிமுகம்.! விலை என்ன தெரியுமா?

 8எம்பி ரியர் கேமரா

இந்த போன் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு, ஃபுல் எச்டி வீடியோ பதிவு ஆதரவு உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக இந்த போனின் ஆரம்ப விலை ரூ.7,499-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Realme seems want to take little risk launching a new 4g smartphone in this 5G era: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X