Home
Mobile

குடியரசு தின விற்பனை.. ஜன.13 ரெடியா இருங்க.. அடிமட்ட ரேட்ல Realme போன்கள்.. எந்தெந்த மாடல்கள்?

குடியரசு தினத்தில் ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு ரியல்மி நிறுவனம் அட்டகாசமான சலுகைகளை கொடுக்கிறது. ஜனவரி 13ஆம் தேதி முதல் ஜனவரி 20ஆம் தேதி வரையில் ரியல்மி குடியரசு தின விற்பனை 2025 (Realme Republic Day Sale 2025) நடக்க இருக்கிறது. இதில் மிட்-ரேஞ்ச் போன்கள் முதல் பட்ஜெட் போன்கள் வரையில் அதிகப்படியான டிஸ்கவுண்ட்டில் கிடைக்க இருக்கின்றன. இதில் எந்த மாடல் உங்களது பட்ஜெட்டில் இருக்கிறது என்பதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

அமேசான் (Amazon) அல்லது ரியல்மி (Realme) தளங்களில் இந்த ஸ்மார்ட்போன்களை ஆர்டர் செய்து கொள்ளலாம். ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி (realme Narzo 70 Turbo 5G) போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.16,999ஆக இருக்கிறது. இதற்கு ரூ.2,500 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ரூ.17,999 விலைக்கு கிடைக்கும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலுக்கு ரூ.2500 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

குடியரசு தின விற்பனை! ஜன.13 ரெடியா இருங்க.. அடிமட்ட ரேட்ல Realme போன்!

மேலும், ரூ.20,999 விலை கொண்ட 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலுக்கு ரூ.2,500 டிஸ்கவுண்ட் கிடைக்க இருக்கிறது. ரியல்மி ஜிடி 6டி (Realme GT 6T) போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.30,999ஆக இருக்கிறது. ரூ.7000 டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலுக்கு ரூ.3000 பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலுக்கு ரூ.5000 டிஸ்கவுண்ட் மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மாடலுக்கு ரூ.7000 பிளாட் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.3000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ரியல்மி பி2 ப்ரோ 5ஜி (Realme P2 Pro 5G) போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலுக்கு ரூ.4000 டிஸ்கவுண்ட் வருகிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலுக்கு ரூ.5000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

மேலும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் மாடலுக்கு ரூ.4000 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ரியல்மி பி1 ஸ்பீடூ 5ஜி (Realme P1 Speed 5G) போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடல்களுக்கு ரூ.1500 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ரியல்மி ஜிடி 7 ப்ரோவின் (Realme GT 7 Pro) 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மாடலுக்கு ரூ.6000 டிஸ்கவுண்ட் வருகிறது.

அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலுக்கு ரூ.5000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி (Realme 13 Pro Plus 5G) போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலுக்கு ரூ.4000 பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.2000 கூப்பன் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலுக்கு ரூ.4000 பிளாட் டிஸ்கவுண்ட் ரூ.3000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

மேலும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலுக்கு ரூ.2000 பிளாட் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.3000 பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ரியல்மி 13 ப்ரோ 5ஜி (Realme 13 Pro 5G) போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலுக்கு ரூ.1500 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த விலைகள் ரியல்மி தளத்தில் வெளியிடப்பட்டவை. ஆகவே, அந்த நிறுவனத்தின் மாறுதலுக்கு உட்பட்டது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Republic Day Sale 2025 From January 13 To January 20 Check Smartphones Deals
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X