ரியல்மி க்யூ 3 எஸ் அறிமுகம் அக்டோபர் 19 உறுதி: உயர்ரக சிப்செட், அதிக புதுப்பிப்பு விகிதம்!

|

ரியல்மி க்யூ 3 எஸ் சாதனம் அக்டோபர் 19 ஆம் தேதி அன்று தொடங்கப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 778ஜி எஸ்ஓசி அடாப்டிவ் 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வரும் என டீஸ் செய்யப்பட்டுள்ளது. ரியல்மி க்யூ 3 எஸ் அக்டோபர் 19 ஆம் தேதி அன்று ரியல்மி ஜிடி நியோ 2டி உடன் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

அக்டோபர் 19 ஆம் தேதி உறுதி

அக்டோபர் 19 ஆம் தேதி உறுதி

ரியல்மி க்யூ3 எஸ் அக்டோபர் 19 ஆம் தேதி அன்று வெளியாகும் எனவும் ரியல்ஜி ஜிடி நியோ 2டி உடன் இந்த சாதனம் வெளியாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வரவிருக்கும் ரியல்மி ஸ்மார்ட்போனின் சில விவரக்குறிப்புகளை நிறுவனம் டீஸ் செய்துள்ளது. ரியல்மி க்யூ3 எஸ் எல்சிடி டிஸ்ப்ளே உடன் 144 ஹெர்ட்ஸ் விகிதம் மற்ரும் எச்டிஆர் 10 ஆதரவுடன் வரும் எனவும் கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 778 ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என்பது ரியல்மி நிர்வாகி மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது கீக்பெஞ்ச் தளத்திலும் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. டீனா பட்டியலில் ரியல்மி க்யூ3 எஸ்-க்கான மாதிரி எண்ணை கொண்டிருக்கிறது.

வெய்போவில் பதிவிட்ட ஒரு இடுகை

வெய்போவில் பதிவிட்ட ஒரு இடுகை

சீன மைக்ரோபிளாக்கிங் தளமான வெய்போவில் பதிவிட்ட ஒரு இடுகையின் மூலம், ரியல்மி க்யூ 3 எஸ் அக்டோபர் 19 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு (இந்திய நேரப்படி 11:30 மணிக்கு) ரியல்மி ஜிடி நியோ 2டி உடன் தொடங்கப்படும் என்பதை ரியல்மி உறுதிப்படுத்தியுள்ளது. வெளியீட்டு தேதி குறித்த பதிவில் ரியல்மி க்யூ 3 எஸ் இரண்டு வண்ண விருப்பங்களில் வரும் என கூறப்படுகிறது. அது ப்ளூ மற்றும் ஊதா வண்ண விருப்பம் ஆகும்.

எல்சிடி டிஸ்ப்ளேவுடனான புதுப்பிப்பு விகிதம்

எல்சிடி டிஸ்ப்ளேவுடனான புதுப்பிப்பு விகிதம்

ரியல்மி வெய்போவின் மற்றொரு இடுகையில், ரியல்மி க்யூ 3எஸ் எல்சிடி டிஸ்ப்ளேவை மாதிரியான புதுப்பிப்பு விகிதங்களுடன் வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஏழு புதுப்பிப்பு விகித விருப்பங்களை பெறும் என கூறப்படுகிறது. அது 30 ஹெர்ட்ஸ், 48 ஹெர்ட்ஸ், 50 ஹெர்ட்ஸ், 60 ஹெர்ட்ஸ், 90 ஹெர்ட்ஸ், 120 ஹெர்ட்ஸ் மற்றும் 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த மாறுபாடானது ஸ்மார்ட்போனின் பயன்பாட்டிற்கு ஏற்ப தாமாகவே புதுப்பிப்பு விகிதங்களை பெறும் என கூறப்படுகிறது. இது மேம்பட்ட மற்றும் தெளிவான வண்ண சித்தரிப்பு பெறுவதை உறுதி செய்கிறது. ரியல்மி க்யூ3எஸ் எச்டிஆர் 10 ஆதரவை கொண்டுள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 778 ஜி எஸ்ஓசி

குவால்காம் ஸ்னாப்டிராகன் 778 ஜி எஸ்ஓசி

ரியல்மி தயாரிப்பு இயக்குனர் வாங் வெய் டெரெக் கடந்த மாதம் வெய்போவில் ஒரு பதிவின் மூலம் டீஸ் செய்திருந்தார். ரியல்மி க்யூ 3 எஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778 ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இது ஸ்மார்ட்போன் ஆனது குறிப்பிடத்தக்க மேம்படுத்தலுடன் வரும் என கூறப்படுகிறது. ரியல்மி க்யூ3 ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 750ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வசதி

12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வசதி

கடந்த மாதம் ரியல்மி ஸ்மார்ட்போன் மாதிரி எம் RMX3461/ RMX3463 உடன் டீனா பட்டியலில் காணப்பட்டது. ஸ்மார்ட்போனின் பல முக்கிய அம்சங்கள் வெளியாகி இருக்கிறது. ரியல்மி ஸ்மார்ட்போன் 6.59 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080x2,412 பிக்சல்) எல்டிபிஎஸ் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் எனவும் ஹோல் பஞ்ச் கட்அவுட் உடன் வரும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் என கூறப்படுகிறது. மைக்ரோ எஸ்டி கார்ட் மூலம் மெமரி விரிவாக்க வசதியும் இதில் இருக்கிறது.

48 மெகாபிக்சல் முதன்மை சென்சார்

48 மெகாபிக்சல் முதன்மை சென்சார்

ரியல்மி ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் இரண்டு 2 மெகாபிக்சல் சென்சார் என மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. RMX3461 ஸ்மார்ட்போனில் 4880 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதியை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Realme Q3s என கருதப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 11 ஆதரவு

ஆண்ட்ராய்டு 11 ஆதரவு

அதேபோல் இந்த வார தொடக்கத்தில் ரியல்மி ஆர்எம்எக்ஸ் 3461 என கீக்பெஞ்சில் காணப்பட்டது. மேலும் முறையே சிங்கிள் கோர் மற்றும் மல்டி கோர் சோதனைகளில் முறையே 791 புள்ளிகள் மற்றும் 2783 புள்ளிகளைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 மூலம் இயக்கப்படும் எனவும் 8 ஜிபி ரேம் உடன் வரும் என கூறப்படுகிறது. மேலும் பட்டியலில் 1.80 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ கோர் ஏஆர்எம் குவால்காம் செயலி மூலம் இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

File Images

Most Read Articles
Best Mobiles in India

English summary
Realme Q3s Smartphone Launches Confirmed on October 19: Teased About its Specs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X