குறைந்த விலை, 8ஜிபி ரேம் அம்சங்களோடு ரியல்மி க்யூ3, க்யூ3 ப்ரோ, க்யூ3 ஐ அறிமுகம்!
ரியல்மி நிறுவனம் சீனாவில் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனங்கள் ரியல்மி க்யூ3 ப்ரோ, க்யூ3, க்யூ3 ஐ ஆகும். இந்த மூன்று ஸ்மார்ட்போன்களும் டிரிபிள் ரியர் கேமரா அமைப்புகளை கொண்டுள்ளது. செல்பி கேமராவிற்கு பஞ்ச் ஹோல் கட்அவுட் வடிவமைப்போடு இது வருகிறது.

ரியல்மி க்யூ3 தொடர் விலைகள்
மூன்று ஸ்மார்ட்போன்களும் தற்போது சீன சந்தைகளில் மட்டுமே அறிமுகம் செய்யப்படுகின்றன. க்யூ3 ப்ரோ ஸ்மார்ட்போன் விலைக் குறித்து பார்க்கையில் இந்த ஸ்மார்ட்போன் இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.20,800 ஆக இருக்கிறது. அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.23,100 ஆக இருக்கிறது. ரியல்மி க்யூ 3 ப்ரோ ஸ்மார்ட்போனானது எலெக்ட்ரிக் ப்ளூ, ஃபயர்ஃப்ளை, கிராவிட்டி பிளாக் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு
ரியல்மி க்யூ 3 ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்புடன் இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.15,000 எனவும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.16,200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு
ரியல்மி க்யூ 3ஐ ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு விலை இந்திய மதிப்புப்படி ரூ.11,600 ஆகவும், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.12,700 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி க்யூ 3 சிறப்பம்சங்கள்
ரியல்மி க்யூ 3 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடனும் வருகிறது. அதேபோல் இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் அட்ரினோ 619 ஜிபியூ பொருத்தப்பட்டிருக்கிறது.
இதன் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில் இதில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமராக்களை கொண்டிருக்கிறது. மேலும் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 30 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இதில் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு இதில் இருக்கிறது.

ரியல்மி க்யூ3 ப்ரோ சிறப்பம்சங்கள்
ரியல்மி க்யூ3 ப்ரோ சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில் இதில் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே, 6.43 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே உடன் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 1100 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.
ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம்நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமராவுடன் இது வருகிறது. மேலும் இதன் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 30 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இது வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 மூலம் இயக்கப்படுகிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் இதில் இருக்கிறது.

ரியல்மி க்யூ3ஐ சிறப்பம்சங்கள்
ரியல்மி க்யூ 3 ஐ சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில் இதில் 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இதில் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.
ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. மேலும் இதில் இரட்டை 2 மெகாபிக்சல் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புற கேமராவிற்கான கேமரா அம்சங்கள் குறித்து தெரியவில்லை. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு இயக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications