ரூ.10,850 மட்டுமே: 5000 எம்ஏஎச் பேட்டரி, 5ஜி ஆதரவோடு கூடிய Realme Q2i!

|

ரியல்மி க்யூ 2ஐ ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி, டைமன்சிட்டி 720 எஸ்ஓசி ஆதரவோடு 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு என்ற வேரியண்டில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்

புதிய மாடல் ஸ்மார்ட்போன்

ரியல்மி நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அது ரியல்மி க்யூ 2 மற்றும் ரியல்மி க்யூ 2 ப்ரோ ஸ்மார்ட்போனாகும். இந்த ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதோடு சேர்த்து ரியல்மி நிறுவனம் ரியல்மி க்யூ 2ஐ ஸ்மார்ட்போனையும் சீனாவில் அறிமுகம் செய்திருக்கிறது.

ரியல்மி க்யூ 2ஐ ஸ்மார்ட்போன் அம்சம்

ரியல்மி க்யூ 2ஐ ஸ்மார்ட்போன் அம்சம்

ரியல்மி க்யூ 2ஐ ஸ்மார்ட்போன் அம்சம் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவு, எச்டி ப்ளஸ் ஸ்கிரீன், டைமன்சிட்டி 720 எஸ்ஓசி ஆதரவு, 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை கொண்டிருக்கிறது.

ரியல்மி க்யூ Q2i விலை விவரங்கள்

ரியல்மி க்யூ Q2i விலை விவரங்கள்

ரியல்மி க்யூ 2i விலை விவரங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் விலை 998 யுவான் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இந்திய மதிப்பில் சுமார் ரூ.10,850 ஆக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஒரே வேரியண்ட்டில் அறிமுகமாகியுள்ளது. அது 4 ஜிபி + 128 ஜிபி சேமிப்பு அம்சமாகும். ப்ளூ மற்றும் மூன்லைட் சில்வர் என்ற இரண்டு வண்ண விருப்பங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

4ஜி வசதி கொண்ட நோக்கியா பீச்சர் போன் மாடல்கள் அறிமுகம்.! குறைந்த விலை.!4ஜி வசதி கொண்ட நோக்கியா பீச்சர் போன் மாடல்கள் அறிமுகம்.! குறைந்த விலை.!

Realme Q2i விவரக்குறிப்புகள்

Realme Q2i விவரக்குறிப்புகள்

ரியல்மி க்யூ 2i ஸ்மார்ட்போனானது 6.52-இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 720 7என்எம் ப்ராசஸர் வசதியோடு இயக்கப்படுகிறது. இது 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு என்ற ஒரே வேரியண்டில் கிடைக்கும். பாதுகாப்பு அம்சத்துக்கு பின்புறத்தில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

ரியல்மி க்யூ 2ஐ கேமரா அம்சங்கள்

ரியல்மி க்யூ 2ஐ கேமரா அம்சங்கள்

ரியல்மி க்யூ 2ஐ கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கலாம். இதில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதி உள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி க்யூ 2ஐ ஸ்மார்ட்போனில் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தோடு கூடிய 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 10 ஆதரவோடு இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Realme Q2i Launches with 18W Fast Charging and 4GB Ram: Here the price and Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X