8000mAh லாம் ஓரம்போ.. Realme ருத்ர தாண்டவம்.. 10000mAh பேட்டரி உடன் புதிய ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?
ரியல்மி (Realme) நிறுவனத்திடம் இருந்து வரவிருக்கும் ரியல்மி நியோ 8 (Realme Neo 8) ஸ்மார்ட்போன் தான், இதுவரை வெளியான ரியல்மி போன்களில் காணப்படாத மிகப்பெரிய பேட்டரியை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 8000mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் கொண்டு இயங்கும் ரியல்மி நியோ 8 ஸ்மார்ட்போன் ஆனது வருகிற ஜனவரி 2026 இல் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் ரியல்மி நியோ 8 மாடலை விட 2000mAh பெரிய பேட்டரி கொண்ட ஒரு ஸ்மார்ட்போனையும் ரியல்மி அறிமுகப்படுத்தும் என்று வதந்திகள் தெரிவிக்கின்றன.

டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்துள்ள சமீபத்திய தகவலின்படி RMX5107 என்கிற மாடல் நம்பர் கொண்ட ஒரு புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் 10,001mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படலாம். இது ரியல்மி பவர் (Realme Power) என்கிற பிராண்டிங் பெயரை பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த ஸ்மார்ட்போன் சுமார் 219 கிராம் எடையுள்ளதாக இருக்கும் என்றும் சில்வர், ஆரஞ்சு மற்றும் ப்ளூ ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் டிசிஎஸ் குறிப்பிட்டுள்ளார். ரியல்மி பவர் ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட லேட்டஸ்ட் ரியல்மி யுஐ 7, குறைந்தபட்சம் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆகிய அம்சங்களையும் பேக் செய்யலாம்.
ரியல்மி நியோ 8 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? இந்த ஸ்மார்ட்போன் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட்டால் இயக்கப்படலாம். இந்த சிப்செட் - பிளாக்ஷிப் பெர்பார்மென்ஸை உறுதி செய்யும். டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1.5கே ரெசல்யூஷன் உடனான பிளாக் ஆன சாம்சங் AMOLED LTPS டிஸ்பிளேவையும், அதில் அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் பிங்கர் பிரிண்ட் சென்சாரையும் கொண்டிருக்கலாம்
சாஃப்ட்வேரை பொறுத்தவரை இது ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ரியல்மி யுஐ 7 ஓஎஸ் உடன் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி திறன் - மற்றொரு சிறப்பம்சமாக இருக்கும் என்பது போல் தெரிகிறது. ரியல்மி நியோ 8 ஸ்மார்ட்போன் ஆனது சுமார் 8000mAh சிங்கிள் செல் பேட்டரி உடன் வரும் என்று கூறப்படுகிறது
இந்த பேட்டரி அதன் முன்னோடியை (ரியல்மி நியோ 7 மாடலை) விட குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருக்கும். வடிவமைப்பை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் கிளாஸ் பேக் உடன் இணைக்கப்பட்ட மெட்டல் ஃபிரேம் உடன் வரலாம். தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 மற்றும் IP69 ரேட்டிங் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. விலையை பொறுத்தவரை ரியல்மி நியோ 8 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.
ஜனவரி 6 அறிமுகமாகும் ரியல்மி 16 ப்ரோ சீரீஸ் ஸ்மார்ட்போன்கள்: ரியல்மி 16 ப்ரோ சீரிஸின் கீழ் ரியல்மி 16 ப்ரோ 5ஜி (Realme 16 Pro 5G) மற்றும் ரியல்மி 16 ப்ரோ பிளஸ் 5ஜி (Realme 16 Pro Plus 5G) ஆகிய 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதியன்று உள்ளூர் நேரப்படி மதியம் 12 மணிக்கு ரியல்மி 16 ப்ரோ சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தை லைவ் ஸ்ட்ரீமிங் செய்யலாம். ரியல்மி 16 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 200 மெகாபிக்சல் ரியாத் கேமரா, 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா, 7000mAh பேட்டரி, 1.5K ரெசல்யூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் OLED டிஸ்பிளே ஆகிய அம்சங்களை பெறலாம்.


Click it and Unblock the Notifications








