இப்போதான் மீண்டு வரோம்: இந்த எல்லா ஸ்மார்ட்போன்களின் விலையும் உயர்வு- பட்டியல் ரொம்ப பெரிசு!

|

ஆகஸ்ட் மாதத்தில் ஸ்மார்ட்போன் சந்தை மிகவும் முன்னோக்கி சென்றது என்றே கூறலாம். கொரோனா பூட்டுதல் காரணமாக நிறுத்தி வைத்திருந்த ஸ்மார்ட்போன்கள் தொடர்ந்து மொத்தமாக வெளியிடப்பட்டு வருகின்றன. சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3, கேலக்சி இசட் ஃப்ளிப் 3 உள்ளிட்ட முதன்மை ஸ்மார்ட்போன்களை ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டன. அதன்படி சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 3 உள்ளிட்ட முதன்மை ஸ்மார்ட்போன்களும் ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டன. பெரும்பாலான ஸ்மார்ட்போன் பிராண்டுகள் ஆகஸ்ட் மாதம் தங்களின் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளன. அதன்படி புதிய ஸ்மார்ட்போன்கள் வாங்க இது சரியான நேரமாகும்.

ஸ்மார்ட்போன்கள் விலை உயர்வு

ஸ்மார்ட்போன்கள் விலை உயர்வு

இந்தியாவில் விலை உயர்வு கொண்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் மைக்ரோமேக்ஸ் இன் 2பி சாதனமும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் போக்கோ எம்3 ப்ரோ, ரெட்மி நோட் 10 போன், ரியல்மி, போக்கோ எம் 3 ஆகிய சாதனங்களும் இடம்பெற்றுள்ளது.

மைக்ரோமேக்ஸ் இன் 2பி ஸ்மார்ட்போன்

மைக்ரோமேக்ஸ் இன் 2பி ஸ்மார்ட்போன்

மைக்ரோமேக்ஸ் இன் 2பி ஸ்மார்ட்போன் ரூ.500 விலை உயர்வை பெற்றுள்ளது. மைக்ரோமேக்ஸ் இன் 2பி ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.7999 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.8,499 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

போக்கோ எம்3 ப்ரோ ஸ்மார்ட்போன்

போக்கோ எம்3 ப்ரோ ஸ்மார்ட்போன்

போக்கோ எம்3 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.1000 விலை உயர்த்தப்பட்டுள்ளது. போக்கோ எம்3 ப்ரோ சாதனத்தின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.9,999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ.10,499 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

போக்கோ எம்3 ஸ்மார்ட்போன்

போக்கோ எம்3 ஸ்மார்ட்போன்

போக்கோ எம்3 ஸ்மார்ட்போனுக்கு ரூ.1000 விலை உயர்த்தப்பட்டுள்ளது. போக்கோ எம்3 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.10,999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.11,499 ஆக இருக்கிறது. அதேபோல் இதன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.11,999 ஆக இருந்த நிலையில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.12,999 ஆக இருக்கிறது.

ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன்

ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன்

ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனுக்கு ரூ.1500 வரை விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,999 ஆக இருந்த நிலையில் தற்போது இதன் விலை ரூ.13,499 ஆக இருக்கிறது. அதேபோல் ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.13,999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.15,499 ஆக இருக்கிறது.

ரியல்மி 8 ஸ்மார்ட்போன்

ரியல்மி 8 ஸ்மார்ட்போன்

ரியல்மி 8 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு விலை ரூ.14,499 ஆக இருந்த நிலையில் தற்போது இதன் விலை ரூ.15,999 ஆக இருக்கிறது. அதேபோல் ரியல்மி 8 சாதனத்தின் விலை ரூ.15,499 ஆக இருந்த நிலையில் தற்போது இதன் விலை ரூ.16,999 ஆக இருக்கிறது. மேலும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் விலை ஆனது ரூ.16,499 ஆக இருந்த நிலையில் தற்போது இது ரூ.17,999 ஆக இருக்கிறது.

ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன்

ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன்

ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வேரியண்ட் விலை ரூ.13,999 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ,15,499 ஆக இருக்கிறது. அதேபோல் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.14,999 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.16,999 ஆக இருக்கிறது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.16,999 ஆக இருந்த நிலையில் இதன் விலை ரூ.18,499 ஆக இருக்கிறது. ரூ.1500 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ரியல்மி சி11 (2021) விலை

ரியல்மி சி11 (2021) விலை

ரியல்மி சி11 (2021) ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி வேரியண்ட் விலை ரூ.6,999 ஆக இருந்த நிலையில் தற்போது இதன் விலை ரூ.7,299 ஆக இருக்கிறது. அதேபோல் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வேரியண்ட் விலை ரூ.8,499 ஆக இருந்த நிலையில் இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ.8,799 ஆக இருக்கிறது. ரூ.300 வரை இந்த சாதனங்களுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ரியல்மி சி21, ரியல்மி சி25எஸ் விலை

ரியல்மி சி21, ரியல்மி சி25எஸ் விலை

ரியல்மி சி11 (2021) போன்றே ரியல்மி சி21 மற்றும் ரியல்மி சி25எஸ் சாதனமும் ரூ.500 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. ரியல்மி சி21 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.8,499 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.8,999 ஆக இருக்கிறது. அதேபோல் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.9,499 ஆக இருந்த நிலையில் இதன் விலை ரூ.9,999 ஆக இருக்கிறது. அதேபோல் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.10,499 ஆக இருந்த நிலையில் ரூ.10,999 ஆக இருக்கிறது. அதேபோல் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.11,499 ஆக இருந்த நிலையில் ரூ.11,999 ஆக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Realme, Poco, Micromax, Redmi Smartphones Gets Price hike in India: Here the List

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X