மொத்த இந்தியாவும் எதிர்பார்த்த Realme போன் வருது.. 10000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் தற்போது ரியல்மி நிறுவனத்தின் அடுத்த போன் குறித்த டீசர் வெளியாகி உள்ளது. அதாவது அந்த அடுத்த ஸ்மார்ட்போன் ரியல்மி பி5 ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் சமீபத்தில் இந்த போன் BIS சான்றிதழ் தளத்தில் RMX5107 என்ற மாடல் நம்பர் உடன் காணப்பட்டுள்ளது
ரியல்மி பி5 அம்சங்கள்: ஆன்லைனில் வெளியான தகவலின்படி, இந்த புதிய ரியல்மி பி5 ஸ்மார்ட்போன் ஆனது 10000mAh பேட்டரி உடன் அறிமுகமாகும் எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் மூன்று நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாக கூறப்படுகிறது.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி செல்பி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் இந்த ரியல்மி பி5 ஸ்மார்ட்போன வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இதில் உள்ளது.
மேலும் டைமன்சிட்டி சிப்செட், பெரிய டிஸ்பிளே, 256ஜிபி மெமரி உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த புதிய ரியல்மி போனில் உள்ளன. தற்போது இந்த ரியல்மி போனின் சில விவரக்குறிப்புகள் மட்டுமே வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் ரியல்மி பி5 ஸ்மார்ட்போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும். குறிப்பாக சமீபத்தில் 10080mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்ட ஹானர் பவர் 2 போனுக்கு போட்டியாக இந்த புதிய ரியல்மி போன் வெளிவர இருக்கிறது. மேலும் ஏற்கனவே ரியல்மி பி4 5ஜி போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
ரியல்மி பி4 5ஜி அம்சங்கள் (realme P4 5G Specifications) : மீடியாடெக் டைமன்சிட்டி 7400 (MediaTek Dimensity 7400) சிப்செட்டால் ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
6.77-இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது இந்த புதிய ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
Android 15 அடிப்படையிலான Realme UI 6 ஓஎஸ் வசதியுடன் இந்த ரியல்மி போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன்.
வெப்ப மேலாண்மைக்காக 7000 சதுர மிமீ ஏர்ஃப்ளோ விசி கூலிங் சிஸ்டமையும் கொண்டுள்ளது இந்த ரியல்மி போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். மேலும் ஏஐ எடிட் ஜீனி, ஏஐ டிராவல் ஸ்னாப் உள்ளிட்ட பல ஏஐ அம்சங்களுடன் ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா + 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவந்துள்ளது ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இந்த ரியல்மி போனில் உள்ளது.
ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிங்கிள் சார்ஜில் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு உள்ளது. எனவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும். தற்போது ரியல்மி பி4 5ஜி போன் ரூ.18,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








