ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்த்த Realme 5ஜி போன் நாளை அறிமுகம்.. 7000mAh பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?
ரியல்மி பி4எக்ஸ் 5ஜி (Realme P4X 5G) ஸ்மார்ட்போன் நாளை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதுவும் நாளை மதியம் 12 மணி அளவில் இந்த போன் அறிமுகமாகும். மேலும் இந்த போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். இந்நிலையில் இந்த புதிய ரியல்மி பி4எக்ஸ் 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களைப் பார்க்கலாம்.
ரியல்மி பி4எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme P4X 5G specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா 5ஜி சிப்செட் (MediaTek Dimensity 7400 Ultra 5G chipset) உடன் இந்த புதிய ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன்அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 4000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
அதுவும் 50எம்பி ஏஐ டூயர் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி உடன் இந்த ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
விசி கூலிங் சிஸ்டம் (VC Cooling System) ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. குறிப்பாக கேமிங் பயனர்களுக்குத் தகுந்தபடி பல சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன. ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவரும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
அதேபோல் 7000mAh பேட்டரி உடன் இந்த ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor), IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) போன்ற அம்சங்களும் இந்த போனில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன. குறிப்பாக இந்த போன் ரூ.15,999-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications








