மொத்த பேரும் வாங்குறாங்க.. ரூ.14000 பட்ஜெட்ல 7000mAh பேட்டரி, 50MP கேமரா.. 45W சார்ஜிங் கொண்ட Realme 5ஜி போன்!
ரியல்மி (Realme) நிறுவனத்தின் ரியல்மி பி4எக்ஸ் 5ஜி (Realme P4x 5G) ஸ்மார்ட்போனின் விற்பனை பிளிப்கார்ட் தளத்தில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஆனது 7000mAh பேட்டரியை கொண்டது மட்டுமல்லாமல், ஓம்னிவிஷன் சென்சாருடன் பிரைமரி கேமரா, 2 ஓஎஸ் அப்டேட் போன்ற பல்வேறு பீச்சர்களில் மிரளவிட்டு இருக்கிறது.
இந்த ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.15,999ஆகவும், 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.17,999ஆகவும் இருக்கிறது. மேலும், 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.19,499ஆகவும் இருக்கிறது.

இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் ரூ.1,550 பேங்க் தள்ளுபடியுடன் வாங்க கிடைக்கிறது. ஆகவே, 6ஜிபி ரேம் வேரியண்ட் ஆனது ரூ.14,499 விலைக்கும், 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வேரியண்ட் ஆனது ரூ.15,949 விலைக்கு கிடைக்கிறது. மேலும், 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வேரியண்ட் ஆனது ரூ.17,949 விலைக்கு கிடைக்கிறது.
ரியல்மி பி4எக்ஸ் 5ஜி போனின் அம்சங்கள் (Realme P4x 5G Specifications): ரியல்மி பிரியர்கள் விரும்பும்படி ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 Ultra 4nm) சிப்செட்டை கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கொடுத்தது மட்டுமல்லாமல், 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்டை கொடுத்துள்ளது.
மேலும், 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை இந்த ரியல்மி பி4எக்ஸ் 5ஜி போன் கொண்டுள்ளது. இதுபோக ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) கிடைப்பதன் மூலம் ஏஐ இமேஜ் எடிட்டிங் கிடைக்கிறது. இதில் ஏஐ ரிமூவ் ரெஃப்ளெக்சன், ஏஐ லேண்ட்ஸ்கேப் 2.0, ஏஐ அல்ட்ரா கிளாரிட்டி போன்ற ஏஐ பீச்சர்களை பெற்று கொள்ள முடிகிறது.
1.5 மீட்டர்கள் உயரத்தில் இருந்து கீழே விழுந்தாலும் தாக்குப்பிடிக்கும்படியான ஆர்மோர்ஷெல் பாதுகாப்பு கொண்ட டிஸ்பிளே கிடைக்கிறது. 6.72 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 144 Hz ரெஃப்ரெஷ் ரேட்டை கொண்டுள்ளது. மேலும், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் இந்த ரியல்மி பி4எக்ஸ் 5ஜி போனில் கிடைக்கிறது.
மேலும், இந்த டிஸ்பிளேவுக்கு டஃப் கார்னர் பாதுகாப்பு, ஏர்பேக் பாதுகாப்பு கிடைக்கிறது. இதுபோக IP64 ரேட்டிங்குடன் டஸ்ட் மட்டுமல்லாமல், ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. ஆகவே, மொத்தமாக மிலிட்டரி கிரேடு பாதுகாப்பை இந்த ரியல்மி பி4எக்ஸ் 5ஜி போனானது கொண்டுள்ளது. 8 ஜிபி ரேம் வேரியண்ட்டின் 10 ஜிபிக்கு டைனாமிக் ரேம் வருகிறது.
ஆகவே, 18 ஜிபிக்கான ரேம் அவுட்புட் பெற்று கொள்ளலாம். பைபாஸ் சார்ஜிங் (Bypass Charging) கொடுத்தது மட்டுமல்லாமல், 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. இதுபோக கேமிங் பேக்கப் அதிகமாக கிடைக்கும்படி 7000mAh பேட்டரி வருகிறது. 90 நிமிடங்கள் போதும், இந்த பேட்டரியை 0 இல் இருந்து 100 சதவீதம் சார்ஜிங் செய்து கொள்ள முடியும்.
50 எம்பி பிரைமரி கேமராவில் ஓவி50டி40 (OV50D40) சென்சார் வந்துள்ளது. மேலும், 2 எம்பி செகண்டரி கேமரா மற்றும் 4K ரெக்கார்டிங் வருகிறது. 8 எம்பி செல்பீ கேமராவில் செல்பீ மற்றும் வீடியோ கால்களை செய்யலாம். மேட் சில்வர் (Matte Sliver), லேக் கிரீன் (Lake Green) மற்றும் எலகென்ட் பின்க் (Elegant Pink) ஆகிய கலர்களில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








