Home
Mobile

பிளிப்கார்ட் பிச்சிக்குது.. 7000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. GOAT சேலில் Realme 5G போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் கோட் சேல் 2026 (Flipkart GOAT Sale 2026) என்னும் சிறப்பு விற்பனையில் சாம்சங், ரியல்மி, போகோ உள்ளிட்ட முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் மாடல்களுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. இதில் ரியல்மி பி4எக்ஸ் 5ஜி (Realme P4x 5G) தள்ளுபடி விற்பனையில் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டு வருகிறது.

இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 7 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.20,499 விலைக்கு வாங்கலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,500 தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.18,999 விலைக்கு கிடைக்கிறது.

பிளிப்கார்ட் பிச்சிக்குது! 7000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. GOAT சேல்!

ரியல்மி பி4எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme P4x 5G Specifications): மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 Ultra 4nm) சிப்செட் கிடைக்கிறது. ஆகவே, தரமான பர்ஃபாமென்ஸ் கொண்ட மாடலாக இந்த ரியல்மி பி4எக்ஸ் 5ஜி இருக்கும்.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மட்டுமே கொடுக்கிறது. இருந்தாலும், 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்களை கொடுத்து இருக்கிறது. மேலும், 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வருகின்றன. ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0) கொண்டுள்ளதால், ஏஐ ரெக்கார்டிங் சம்மரி (AI Recording Summary), ஏஐ ஸ்மார்ட் லூப் (AI Smart Loop) கிடைக்கின்றன.

மேலும், ஏஐ கேமிங் கோச் (AI Gaming Coach) கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்கு ஏற்றபடி 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.72 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. 391 பிபிஐ பிக்சல் டென்சிட்டி உள்ளது.

மேலும், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த் பேக் செய்யப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Electronic Image Stabilization) சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மோனோகுரோம் கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) இந்த ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது.

மெயின் கேமராவில் ஓம்னிவிஷன் நிறுவனத்தின் ஓவி50டி40 (OV50D40) சென்சார், ஆட்டோ போகஸ் (Auto Focus) மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. லேட்டஸ்ட் ஏஐ பீச்சர்களான ஏஐ எரைசர் (AI Eraser), ஏஐ ரெப்ளெக்சன் ரீமூவர் (AI Reflection Remover) கிடைக்கிறது. மேலும், ஏஐ லேண்ட்கேப் 2.0 (AI Landscape 2.0), ஏஐ அல்ட்ரா கிளாரிட்டி (AI Ultra Clarity) உள்ளது.

செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 1080p ரெக்கார்டிங் கொண்ட 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் 7000mAh பேட்டரியை இந்த ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் பேக் செய்துள்ளது. இந்த பெரிய பேட்டரியுடன் 8.39 எம்எம் தடிமன் மற்றும் 208 கிராம் எடை கொடுத்துள்ளது. டைப்-சி சார்ஜிங் உள்ளது.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளன. மேலும், 5300 எம்எம் விசி ப்ரோஸ்ட்கோர் கூலிங் சிஸ்டம் (VC FrostCore Cooling System) மற்றும் IP64 ரேட்டிங் டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) கிடைக்கிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) உள்ளது. சில்வர், பிங்க் மற்றும் கிரீன் கலர்களில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Realme P4x 5G With 6GB RAM Available At Rs 1500 Discount in Flipkart GOAT Sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X