Home
Mobile

பொளக்குது விற்பனை.. 7000mAh பேட்டரி.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 46 சதவீத ஆஃபரில் realme 5ஜி போன்.. எந்த மாடல்?

7000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற கேமிங் பிரியர்கள் விரும்பும் பீச்சர்கள் மட்டுமல்லாமல், ஓம்னிவிஷன் சென்சாருடன் 50 எம்பி கேமரா, IP64 ரேட்டிங் கொண்ட ரியல்மி பி4எக்ஸ் 5ஜி (Realme P4x 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலைக்கு வாங்க கிடைக்கிறது. இந்த தள்ளுபடி விவரங்கள் மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 46 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.20,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். இந்த நேரடி தள்ளுபடி போக தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,050 தள்ளுபடியும் இந்த ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது. 2 தள்ளுபடிகளையும் பெற்றால், ரூ.19,949 விலைக்கு கிடைக்கும்.

பொளக்குது விற்பனை.. 7000mAh பேட்டரி.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. ஆஃபரில்!

ரியல்மி பி4எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme P4x 5G Specifications): 6.72 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. 144 Hz ரெஃப்ரெஷ் ரேட், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 16.7 மில்லியன் கலர் டெப்த் மற்றும் 391 பிபிஐ பிக்சல் டென்சிட்டியை இந்த ரியல்மி பி4எக்ஸ் 5ஜி போன் கொடுக்கிறது.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 Ultra 4nm) சிப்செட் கொண்ட மாடலாக இந்த ரியல்மி பி4எக்ஸ் 5ஜி இருக்கிறது. 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுத்துள்ளது. ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0) கிடைக்கிறது.

மாலி ஜி 615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது. ஓம்னிவிஷன் நிறுவனத்தின் ஓவி50டி40 (OV50D40) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு 2 எம்பி மோனோகுரோம் சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், ஆட்டோ போகஸ் (Auto Focus) மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கொண்ட டூயல் கேமராவாக இது இருக்கிறது.

எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Electronic Image Stabilization) கொடுக்கப்பட்டு உள்ளது.ஏஐ எரைசர் (AI Eraser), ஏஐ ரெப்ளெக்சன் ரீமூவர் (AI Reflection Remover) மற்றும் ஏஐ லேண்ட்கேப் 2.0 (AI Landscape 2.0) பீச்சர்கள் கிடைக்கின்றன. மேலும், ஏஐ அல்ட்ரா கிளாரிட்டி (AI Ultra Clarity) வருகிறது. 8 எம்பி செல்பீ கேமரா மற்றும் 1080p ரெசொலூஷன் ரெக்கார்டிங் கிடைக்கிறது.

5300 எம்எம் விசி ப்ரோஸ்ட்கோர் கூலிங் சிஸ்டம் (VC FrostCore Cooling System) உள்ளது. IP64 ரேட்டிங் டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) கிடைக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் 7000mAh பேட்டரி கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொடுக்கப்பட்டு உள்ளன. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) உள்ளது.

ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor) கிடைக்கிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 6 (Wi-Fi 6), மற்றும் ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) கிடைக்கிறது. மேட் சில்வர் (Matte Sliver), எலிகன்ட் பிங்க் (Elegant Pink) மற்றும் லேக் கிரீன் (Lake Green) ஆகிய கலர்களில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
realme P4x 5G With 6GB RAM Available At 46 Percent Discount on Flipkart Check Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X