Home
Mobile

இப்படி ஒரு போன் வாங்கனும்.. பட்ஜெட் ரேட்ல 44W, BYBASS சார்ஜிங்.. 90 FPS கேமிங்.. VC கூலிங்.. எந்த மாடல்?

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் ரியல்மி பி4எக்ஸ் 5ஜி (Realme P4x 5G) ஸ்மார்ட்போனின் வெளியீடு உறுதியாகியது. அதுமட்டுமல்லாமல், ஃபாஸ்ட் சார்ஜிங், விசி கூலிங் சிஸ்டம், கேமிங் ஃஎப்பிஎஸ் போன்ற பீச்சர்களும் வெளியாகி இருக்கிறது. இதுவொரு பட்ஜெட் மாடலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதனால், எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இந்த ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ரியல்மி பி4 5ஜி மற்றும் ரியல்மி பி4 ப்ரோ 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கின்றன. பட்ஜெட் விலையில் களமிறங்கியதால், ரியல்மி பிரியர்கள் மட்டுமல்லாமல், மற்ற பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்களிடையேவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தக்க வைக்க ரியல்மி நிறுவனம், ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை களமிறக்க இருக்கிறது.

இப்படி ஒரு போன் வாங்கனும்.. பட்ஜெட் ரேட்ல 44W, BYBASS சார்ஜிங்!

பிளிப்கார்ட் தளத்தில் இந்த போனுக்கான மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் டிசைன் மற்றும் கலர் விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. ஆனால், ஃபாஸ்ட் சார்ஜிங், விசி கூலிங் சிஸ்டம், கேமிங் ஃஎப்பிஎஸ் போன்ற பீச்சர்களும், இந்த செக்மெண்ட்டில் பெரிய பேட்டரி கொண்ட மாடலாகவும் இந்த ரியல்மி பி4எக்ஸ் 5ஜி இருக்கும் என்பதும் உறுதியாகி இருக்கிறது.

ரியல்மி பி4எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme P4x 5G Specifications): இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் பஞ்ச் ஹோல் டிஸ்பிளே (Punch hole Display) கிடைக்க இருக்கிறது. ஜிடி மோட் (GT Mode) கிடைக்கிறது. இதில் 90 ஃஎப்பிஎஸ் (FPS) கேம்பிளே கிடைக்க இருக்கிறது. 44W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) மற்றும் ஃபைபாஸ் சார்ஜிங் (Bybass Charging) கிடைக்க இருக்கிறது. ஆகவே, பெரிய பேட்டரி எதிர்பார்க்கலாம்.

ஏனென்றால், ஃபைபாஸ் சார்ஜிங் கொண்ட மாடல்களில் நேரடியாக மதர் போர்டுக்கு குறிப்பிட்ட சதவீத சார்ஜிங் கொண்டு செல்லப்படும். இது பேட்டரி ஹீட் கன்ட்ரோலுக்காக கொடுப்படுகிறது. ஆகவே, இதில் 6000mAh பேட்டரி அல்லது அதற்கு மேல் எதிர்பார்க்கலாம். இதை உறுதி செய்யும்படி இந்த செக்மெண்ட்டில் பெரிய பேட்டரி கொண்ட மாடலாக இருப்பதை ரியல்மி குறிப்பிட்டுள்ளது.

அதேபோல விசி கூலிங் சிஸ்டம் (VC Cooling System) இதில் கிடைக்க இருக்கிறது. இந்த விவரங்கள் மட்டுமே உறுதியாகி இருக்கின்றன. மற்ற விவரங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போனின் பட்ஜெட்டை தெரிந்து கொள்ள முன்னதாக வெளியான ரியல்மி பி3எக்ஸ் 5ஜி (Realme P3X 5G) ஸ்மார்ட்போனின் விலையை பார்க்க வேண்டும். அதேபோல பீச்சர்களையும் பார்க்க வேண்டும்.

ரியல்மி பி3எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme P3x 5G Specifications): இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் 6.72 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்பிளே மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6400 6nm) சிப்செட் கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS), ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + செகண்டரி கேமரா + 8 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் & 6000mAh பேட்டரி உள்ளது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் உள்ளது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.13,999 பட்ஜெட்டில் இருந்தது. ஆகவே, பி4எக்ஸ் 5ஜி போனானது ரூ.14,999 பட்ஜெட்டில் கிடைக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme P4x 5G With 45W Charging 90 FPS Gameplay India Launch Confirmed Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X