Home
Mobile

அடேங்கப்பா.. மார்க்கெட்டே மிரள போகுது.. 50MP கேமரா.. வருகிறது புதிய Realme 5ஜி போன்.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் அடுத்து ரியல்மி பி4எக்ஸ் 5ஜி (Realme P4X 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது இந்த போன் பிளிப்கார்ட் மைக்ரோசைட் தளத்தில் நேரலையில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் வரும் நாட்களில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில் ரியல்மி பி4எக்ஸ் 5ஜி போனின் விலை மற்றும் விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளன. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ரியல்மி பி4எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme P4X 5G specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா சிப்செட் (MediaTek Dimensity 7400 Ultra chipset) உடன் இந்த புதிய ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

மார்க்கெட்டே மிரள போகுது.. வருகிறது புதிய Realme 5ஜி போன்.. எந்த மாடல்

50எம்பி மெயின் கேமரா + 2எம்பி செகண்டரி லென்ஸ் என்கிற டூயர் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 4000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

விசி கூலிங் சிஸ்டம் (VC Cooling System) ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. குறிப்பாக கேமிங் பயனர்களுக்குத் தகுந்தபடி பல சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன. ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த போன் வெளிவரும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

ஆன்லைனில் வெளியான தகவலின்படி, 7000mAh பேட்டரி உடன் இந்த ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்க்கெட்டே மிரள போகுது.. வருகிறது புதிய Realme 5ஜி போன்.. எந்த மாடல்

இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor), IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) போன்ற அம்சங்களும் இந்த போனில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் ரூ.15,999 விலையில் ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தகவல்கள் கசிந்துள்ளது.

image, credit: Realme India,

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme P4X 5G price and specifications leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X