Home
Mobile

அடிச்சு புடிச்சு வாங்க போகும் இந்தியா.. ரூ.15000 பட்ஜெட்ல 5ஜி, 7000mAh பேட்டரி, 18GB ரேம்.. புது Realme போன்!

ரியல்மி (Realme) நிறுவனம் வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி அன்று - பட்ஜெட் விலையில் ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போன் மற்றும் ஒரு புதிய ஸ்மார்ட் வாட்ச் என மொத்தம் 2 புதிய தயாரிப்புகளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது.

புதிய ஸ்மார்ட் வாட்ச் - ரியல்மி வாட்ச் 5 (Realme Watch 5) மாடல் ஆகும். இது ரியல்மி பி4எக்ஸ் 5ஜி (Realme P4x 5G) ஸ்மார்ட்போனுடன் சேர்ந்து டிசம்பர் 4 அன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. இவ்விரு டிவைஸ்களுமே ஏற்கனவே பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் பிரத்யேக மைக்ரோசைட்டுகள் வழியாக முக்கிய அம்சங்களை எடுத்துக்காட்டுகின்றன.

ரூ.15000 பட்ஜெட்ல 5ஜி, 7000mAh பேட்டரி, 18GB ரேம்.. புது Realme போன்!

இதற்கிடையில் அறிமுகத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிப்ஸ்டர் @yabhishekhd வழியாக, ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அனைத்து ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் விலை நிர்ணயங்களும் ஆன்லைன் வழியாக லீக் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகமாகும்

பேஸிக் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.15,999 என்றும், 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.17,499 என்றும் மற்றும் ஹை-எண்ட் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.19,499ஏ என்றும் நிர்ணயம் செய்யப்படலாம்.

ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் (Realme P4x 5G Specifications Expected)?
- ஃபுல் எச்டி பிளஸ் ரெசல்யூஷன் உடனான 6.72-இன்ச் எல்சிடி டிஸ்பிளே
- 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 1000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- டைமன்சிட்டி 7400 அல்ட்ரா 5ஜி (Dimensity 7400 Ultra 5G) சிப்
- 4கே வீடியோ ரெக்கார்ட் ஆதரவு உடனான 50எம்பி ஏஐ கேமரா (50MP AI Camera)
- 8ஜிபி வரை ஆன்போர்டு ரேம் (ஒன்போர்டு RAM)

- 10ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) உடன் இணைக்கும் போது 18GB டைனமிக் ரேம் (Dynamic RAM )
- UFS 3.1 ஸ்பீட் ஸ்டோரேஜ்
- 256ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 5300 மிமீ² விசி ப்ரோஸ்ட்கோர் (FrostCore) கூலிங் சிஸ்டம்
- 45W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 7000mAh பேட்டரி
- இராணுவ தர நீடித்துழைப்பு சான்றிதழ் (military grade durability certification)

முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி பி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (Realme P3x 5G Specifications):
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 6.7-இன்ச் FHD+ (1080 x 2400 பிக்சல்ஸ்) LCD டிஸ்பிளே
- 8GB வரை RAM மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ்
- மீடியாடெக் டைமன்சிட்டி 6400 சிப்செட் (MediaTek Dimensity 6400 SoC)

- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான Realme UI 6 ஓஎஸ்
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 2 மெகாபிக்சல் சென்சார்
- முன்பக்கத்தில் 8-மெகாபிக்சல் செல்பீ சென்சார்
- 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்
- 6,000mAh பேட்டரி
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 மற்றும் IP69 ரேட்டிங்

குறிப்பிடத்தக்க வகையில் அறிமுகத்தின் போது ரியல்மி பி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் முறையே ரூ.13,999 மற்றும் ரூ.14,999 க்கு வாங்க கிடைத்தது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme P4x 5G India Price Leaked Ahead Launch on December 4
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X