Home
Mobile

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல்.. 7000mAh பேட்டரி.. ரியல்மி 5ஜி போனுக்கு சூப்பர் ஆஃபர்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் வரும் அக்டோபர் 9-ம் தேதி பிக் பில்லியன் டேஸ் சேல் 2026 (Flipkart's Big Billion Days Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெற உள்ளது. இந்த சிறப்ப விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்க உள்ளது. அதேபோல் ரியல்மி நிறுவனத்தின் அசத்தலான 5ஜி போன் ஒன்று தள்ளுபடி விலையில் கிடைக்க உள்ளது.

அதாவது 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி பி4எக்ஸ் 5ஜி (Realme P4x 5G) ஸ்மார்ட்போன் தற்போது ரூ.26,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற உள்ள சிறப்பு விற்பனையில் இந்த ரியல்மி ஸ்மார்ட்போனை ரூ.22999 விலையில் வாங்கிவிட முடியும்.

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல்.. ரியல்மி 5ஜி போனுக்கு ஆஃபர்..

ரியல்மி பி4எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme P4X 5G specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா 5ஜி சிப்செட் (MediaTek Dimensity 7400 Ultra 5G chipset) உடன் இந்த புதிய ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன்அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 240 Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

50எம்பி பிரைமரி கேமரா + 2 எம்பி மோனோகுரோம் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

விசி கூலிங் சிஸ்டம் (VC Cooling System) ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. குறிப்பாக கேமிங் பயனர்களுக்குத் தகுந்தபடி பல சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன. ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல்.. ரியல்மி 5ஜி போனுக்கு ஆஃபர்..

அதுவும் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance), சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), போன்ற அம்சங்களும் இந்த போனில் உள்ளன. எலிகன்ட் பிங்க்,லேக் கிரீன் கலர்களில் இந்த போனை வாங்க முடியும்.

மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Realme P4X 5G Available at Rs 22999 During Flipkart Big Billion Days Sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X