2026 சேல் பிச்சிக்குது.. ஆஃபரில் 7000mAh பேட்டரி, 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. 144 Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 2026 ஆம் ஆண்டின் ஆஃபர் கிடைப்பதால், மேலும் மலிவான விலைக்கு ரியல்மி ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. இதில் நம்ப முடியாத விலைக்கு ரியல்மி பி4எக்ஸ் 5ஜி (Realme P4x 5G) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 11 சதவீத டிஸ்கவுண்ட் போக 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் போக ரூ.15,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.800 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.15,199 விலைக்கு இந்த 7000mAh பேட்டரி போனை வாங்கி கொள்ளலாம்.

ரியல்மி பி4எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme P4x 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 Ultra 4nm) சிப்செட்டை இந்த ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், மாலி ஜி 615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டை கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைத்துள்ளது.
2 ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் இந்த ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது. மேலும், ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0) கிடைத்துள்ளது. 6.72 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைத்துள்ளது. 144 Hz ரெஃப்ரெஷ் ரேட், 240 Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது.
மேலும், ஃபுல் எச்டிபிளஸ் (Full HD+) ரெசொலூஷன் மற்றும் 391 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைத்துள்ளது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி மோனோகுரோம் (Monochrome) கேமரா கொண்டுள்ளது. மெயின் கேமராவில் ஆட்டோ போகஸ் (Auto Focus) மற்றும் ஓம்னிவிஷன் ஓவி50டி40 (OV50D40) சென்சார் கிடைத்துள்ளது. மேலும், 4K 30 fps வீடியோ ரெக்கார்டிங் கொண்டுள்ளது.
மல்டி வியூ வீடியோ ஷூட்டிங் (Multi View Video Shooting), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), நைட் மோட் (Night Mode) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி செல்பீ கேமராவை இந்த ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஏஐ இமேஜ் எடிட்டிங் கொண்டுள்ளது. ஆகவே, ஏஐ எரைசர் (AI Eraser), ஏஐ ரெப்ளெக்சன் ரீமூவர் கிடைக்கிறது.
ஏஐ லேண்ட்கேப் 2.0 (AI Landscape 2.0) மற்றும் ஏஐ அல்ட்ரா கிளாரிட்டி (AI Ultra Clarity) கிடைத்துள்ளது. 7000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கை இந்த ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. பைபாஸ் சார்ஜிங் (Bypass Charging) உள்ளது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கிடைத்துள்ளது.
மேலும், IP64 ரேட்டிங் டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டைப்-சி ஆடியோ உள்ளது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA / NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 6 (Wi-Fi 6) மற்றும் ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) கிடைக்கிறது. மேட் சில்வர் (Matte Sliver), எலிகன்ட் பிங்க் (Elegant Pink), லேக் கிரீன் (Lake Green) கலர்களில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








