Home
Mobile

அறிமுகமானது புதிய Realme போன்.. 8000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?

ரியல்மி நிறுவனம் கடந்த ஆண்டு இறுதியில் 7000எம்ஏஎச் பேட்டரி கொண்ட ரியல்மி பி4எக்ஸ் 5ஜி (Realme P4x 5G) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ததுத. இந்நிலையில் அந்நிறுவனம் 8000எம்ஏஎச் பேட்டரி கொண்ட ரியல்மி பி4எக்ஸ் 4ஜி (Realme P4x 4G) மாடலை தற்போது உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இப்போது இந்த ரியல்மி பி4எக்ஸ் 4ஜி மாடலின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

ரியல்மி பி4எக்ஸ் 4ஜி அம்சங்கள் (Realme P4x 4G specifications): 6.8-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி வாட்டர் டிராப் நாட்ச் வசதியுடன் ரியல்மி பி4எக்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 900 நிட்ஸ் பிரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அறிமுகமானது புதிய Realme போன்.. 8000mAh பேட்டரி.. எந்த மாடல்?

4ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி உடன் ரியல்மி பி4எக்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

50எம்பி ரியர் கேமரா உடன் ரியல்மி பி4எக்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

Realme UI சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ரியல்மி பி4எக்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) வசதியுடன் ரியல்மி பி4எக்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance)கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி போன்.

8000எம்ஏஎச் பேட்டரி உடன் ரியல்மி பி4எக்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W SuperVOOC சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

அறிமுகமானது புதிய Realme போன்.. 8000mAh பேட்டரி.. எந்த மாடல்?

டூயல் சிம் சப்போர்ட், 4ஜி, வைஃபை 5, புளூடூத் 5.2, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ரியல்மி பி4எக்ஸ் 4ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன. ராலி ஒயிட் மற்றும் பாண்டம் ப்ளூ நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

தற்போது மலேசியாவில் இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது. 4ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி பி4எக்ஸ் 4ஜி ஸ்மார்ட்போனின் விலை MYR 799 (இந்திய மதிப்பில் ரூ.18,199)-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Realme P4x 4G with 8000mAh battery launched: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X