அக்.8-க்கு அப்புறம் இதுதான்.. 7000mAh பேட்டரி.. 15W ஃபாஸ்ட் சார்ஜிங்.. HD+ டிஸ்பிளே.. எந்த மாடல்?
பட்ஜெட் விலையில் களமிறங்க இருக்கும் ரியல்மி பி4எஸ் லைட் ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள் மட்டுமல்லாமல், விலை விவரங்களும் அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கின்றன. அக்டோபர் 8ஆம் தேதியில் விற்பனைக்கு வர இருக்கிறது. 2 வேரியண்ட்களை தள்ளுபடியுடன் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் அக்டோபர் 8ஆம் தேதி முதலாவது விற்பனை (First Sale) தொடங்குகிறது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.14,999ஆக இருக்கிறது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ16,999ஆக இருக்கிறது. ரூ.1,833 தள்ளுபடியுடன் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.

ரியல்மி பி4எஸ் லைட் அம்சங்கள் (Realme P4s Lite Specifications): இந்த ஸ்மார்ட்போனில் 6.75 இன்ச் அளவிலான HD+ LCD டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இதில் 1570 x 720 பிக்சல்கள் ரெசல்யூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் போன்ற கிடைக்கின்றன. மேலும், 700 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் HBM முறையில் 900 நிட்ஸ் வரை பீக் பிரைட்னஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த போனில் ஆக்டா கோர் T7250 பிராசஸர் (Octa Core T7250 Processor) இடம்பெற்றுள்ளது. கிராபிக்ஸ் செயல்திறனுக்காக Mali-G57 GPU வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் 4GB LPDDR4X ரேம் மற்றும் UFS 2.2 ஸ்டோரேஜ் ஆதரவு கிடைக்கிறது. மேலும், 64GB மற்றும் 128GB என இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுமட்டுமின்றி, கூடுதல் ஸ்டோரேஜை பயன்படுத்துவதற்காக மைக்ரோஎஸ்டி கார்டு ஆதரவும் இந்த ரியல்மி பி4எஸ் லைட் ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டுள்ளது. USB OTG வசதியும் இடம்பெற்றுள்ளது. இதனால் போட்டோக்கள், வீடியோக்கள், பிடிஎப்கள் உள்ளிட்ட பல்வேறு ஃபைல்கள் கூடுதலாக ஸ்டோர் செய்ய விரும்பும் யூசர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
கேமராவை பொறுத்தவரை, பின்புறத்தில் 13 எம்பி வைடு கேமரா (13MP Wide Camera) வழங்கப்பட்டுள்ளது. இது f/2.2 அபெர்ச்சர் மற்றும் ஆட்டோ போகஸ் (Auto Focus) ஆதரவைக் கொண்டுள்ளது. கூடுதலாக, செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 5 எம்பி ஃப்ரன்ட் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு கேமரா மோட்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த கேமராவில் போட்டோ, வீடியோ, போர்ட்ரெய்ட், நைட், பனோரமா, டைம்-லேப்ஸ், ஸ்டிக்கர், HI-RES, Google Lens மற்றும் Pro உள்ளிட்ட பல்வேறு ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்புற கேமரா மூலம் 1080p மற்றும் 720p வீடியோக்களை 30fps வேகத்தில் பதிவு செய்ய முடியும். மேலும், 10x வரை டிஜிட்டல் ஜூம் வசதியும் கிடைக்கிறது.
முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள 5 எம்பி கேமரா மூலம் 720p வீடியோக்களை 30fps வேகத்தில் பதிவு செய்ய முடியும். இதுதவிர, முன்பக்க கேமராவில் போட்டோ, வீடியோ, போர்ட்ரெய்ட், நைட் மற்றும் பனோரமா உள்ளிட்ட கேமரா மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் செல்பீ மற்றும் வீடியோ காலிங்களுக்கு இந்த கேமரா போதுமானதாக இருக்கும்.
இந்த ஸ்மார்ட்போனில் 7000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதன் ரேட்டட் பேட்டரி திறன் 6820mAh ஆகும். மேலும், 15W ஃபாஸ்ட் சார்ஜிங் (15W Fast Charging) மற்றும் 15W PD சார்ஜிங் (15W PD Charging) ஆதரவும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட நேர பேட்டரி பேக்கப்பை எதிர்பார்க்கும் யூசர்களுக்கு இந்த போன் ஏற்றதாக இருக்கும்.
USB Type-C போர்ட் மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. மேலும், Bluetooth மூலம் SBC, AAC மற்றும் LDAC உள்ளிட்ட ஆடியோ கோடெக்குகளுக்கான ஆதரவும் இடம்பெற்றுள்ளது. இதனால் வயர்டு மற்றும் வயர்லெஸ் ஆடியோ சாதனங்களை பயன்படுத்தும் பயனர்களுக்கு கூடுதல் வசதிகள் கிடைக்கின்றன.
சைடு-மவுண்டட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் ஃபேஸ் அன்லாக் (Face Unlock) வசதியும் இடம்பெற்றுள்ளது. மேலும், ப்ராக்ஸிமிட்டி சென்சார், ஆம்பியன்ட் லைட் சென்சார், இ-காம்பஸ் மற்றும் ஆக்சிலரோமீட்டர் உள்ளிட்ட பல்வேறு சென்சார்களும் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ளன.
கனெக்டிவிட்டி அம்சங்களை பொறுத்தவரை, டூயல் சிம், 4G LTE, Wi-Fi 5 மற்றும் Bluetooth 5.2 உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. இதில் 5G மற்றும் eSIM ஆதரவு வழங்கப்படவில்லை. மேலும், Wi-Fi மற்றும் செல்லுலார் நெட்வொர்க் அடிப்படையிலான லொக்கேஷன் வசதிகளும் இந்த ரியல்மி பி4எஸ் லைட் ஸ்மார்ட்போனில் கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications
