ரியல்மி களமிறக்கும் புதிய 5ஜி போன்.. IP69 ரேட்டிங்.. 50எம்பி கேமரா.. 8000mAh பேட்டரி.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி பி4எஸ் (Realme P4s) ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த ரியல்மி பி4எஸ் போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ரியல்மி பி4எஸ் அம்சங்கள் (Realme P4s Specifications): 1.5கே AMOLED டிஸ்பிளே உடன் புதிய ரியல்மி பி4எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. அதுவும் AMOLED டிஸ்பிளே உடன் இந்த போன் வெளியாகும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மீடியாடெக் டைமன்சிட்டி 7400 சிப்செட் (Dimensity 7400 chipset) உடன் ரியல்மி பி4எஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். குறிப்பாக இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் ரியல்மி பி4எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய போனில் உள்ளது.
IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance)உடன் ரியல்மி பி4எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போனில் உள்ளது.
50எம்பி மெயின் ரியர் கேமரா உடன் ரியல்மி பி4எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி அல்லது 32எம்பி கேமரா உடன் ரியல்மி பி4எஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட வசதிகள் ரியல்மி பி4எஸ் ஸ்மார்ட்போனில் உள்ளன. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் மற்றும் வடிவமைப்புக்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி பி4எஸ் போன்.
8000எம்ஏஎச் பேட்டரி உடன் ரியல்மி பி4எஸ் போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த போன் சற்று உயர்வான விலையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது ரியல்மி பி4எஸ் ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications