Realme சம்பவம் உறுதி.. அடுத்த மாசத்துக்கு அப்புறம் இதுதான்.. புது P சீரிஸ் மாடல் வருது!
ரியல்மி நிறுவனத்தின் புதிய மாடலாக ரியல்மி பி4எஸ் 5ஜி (Realme P4s 5G) வெளியாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் ரேம், ஸ்டோரேஜ் மற்றும் கலர் வேரியண்ட்கள் குறித்த விவரங்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. பி சீரிஸ் மாடல்களில் பேட்டரி கேபாசிட்டி அதிகமாக இருக்கும் என்பதால், இது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகியது. ஆகவே, இந்த ஆகஸ்ட் மாத்தில் ரியல்மி பி5 5ஜி ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ரியல்மி பி4எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாக இருப்பது இப்போது, தெரியவந்துள்ளது. ஆகவே, ரியல்மி பிரியர்களுக்கு டபுள் ட்ரீட் கிடைக்க இருக்கிறது.

ரியல்மி பி4எஸ் 5ஜி ரேம், ஸ்டோரேஜ் (Realme P4s 5G RAM, Storage): 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன. மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் கிடைக்க இருக்கிறது.
கிரீன் (Green) மற்றும் பிரவுண் (Brown) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. இந்த ரேம், ஸ்டோரேஜ் மற்றும் கலர்களுடன் அடுத்த மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. முன்னதாக வெளியான ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போனில் 7000mAh பேட்டரி கிடைத்தது. ஆகவே, இந்த ரியல்மி பி4எஸ் 5ஜி ஸ்மார்ட்போனிலும் பெரிய பேட்டரி எதிர்பார்க்கலாம்.
அதேபோல 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரியல்மி பி4 5ஜி (realme P4 5G) ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது. ஆனால், இந்த ரியல்மி பி4எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் முன்னதாகவே வெளியாக இருப்பது தெரிகிறது. இப்போது, ரியல்மி பி4 5ஜி மாடலின் பீச்சர்கள் மற்றும் விலையை பார்க்கலாம். இதில் இருந்து அப்கிரேட் செய்யப்பட்டு பி4எஸ் 5ஜி மாடலில் கிடைக்கும்.
ரியல்மி பி4 5ஜி அம்சங்கள் (Realme P4 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 Ultra 4nm) சிப்செட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) கிடைக்கிறது. ஆகவே, ரியல்மி பி4எஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கும்.
6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மற்றும் ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன் கிடைக்கிறது. எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமராவில் ஓவி50டி40 (OV50D40) சென்சார் மற்றும் எப்/1.8 அபெர்சர் கிடைக்கிறது.
8 எம்பி அல்ட்ரா வைடு கேமராவில் எப்/2.2 அபெர்சர் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்480 (Sony IMX480) சென்சாருடன் 16 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. எப்/2.4 அபெர்சர் மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரியை இந்த ரியல்மி பி4 5ஜி கொடுத்து இருக்கிறது.
6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக விலை ரூ.18,499 பட்ஜெட்டில் இருந்தது. ஆனால், சலுகையில் ரூ.15,000 பட்ஜெட்டில் கிடைத்தது. ஆகவே, ரியல்மி பி4எஸ் 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.20,000 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications