பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.4600 ஆஃபரில் 8000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
பிரீமியம் லுக் மட்டுமல்லாமல், 8000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், அமோலெட் டிஸ்பிளே, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கேமரா போன்ற பீச்சர்களிலும் பட்டையை கிளப்பிய ரியல்மி பி4எஸ் 5ஜி (Realme P4s 5G) ஸ்மார்ட்போன் நம்ப முடியாத தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. இந்த ரியல்மி பி4எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை பார்க்கலாம்.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.34,999 ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.4,600 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.30,399 விலைக்கு இந்த ரியல்மி பி4எஸ் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். 12 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ கிடைக்கிறது.

அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.37,999 ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து ரூ.4,750 தள்ளுபடியை தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.33,249 விலைக்கு வாங்கலாம். எலக்ட்ரிக் சியான் (Electric Cyan) மற்றும் டைட்டானியம் கிரே (Titanium Grey) ஆகிய கலர்களில் வாங்கி கொள்ளலாம்.
ரியல்மி பி4எஸ் 5ஜி அம்சங்கள் (Realme P4s 5G Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா (Octa Core MediaTek Dimensity 7400 Ultra) சிப்செட் கிடைக்கிறது. மேலும், ஆர்ம் மாலி ஜி615 ஜிபியு (Arm Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ரியல்மி யுஐ 7.0 (Realme UI 7.0) கொண்ட மாடலாக இந்த ரியல்மி பி4எஸ் 5ஜி கிடைக்கிறது.
144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் (1272 x 2772 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 1.5K ரெசொலூஷன் மற்றும் 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 450 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 3000Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கிடைக்கிறது.
சாம்சங் எம்14 (Samsung M14) பேனல் மற்றும் ஏஜிசி டிடி ஸ்டார் டிபிளஸ் (AGC DT Star D+) கிளாஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. 2 ஆக்சிஸ் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவுக்கு ஆட்டோ போகஸ் (Auto Focus) மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது.
இதில் அண்டர்வாட்டர் (Underwater) வீடியோகிராபி மற்றும் போட்டோகிராபி கிடைக்கிறது. ஆகவே இதற்கு ஏற்ப IP65 ரேட்டிங் + IP66 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 8000mAh பேட்டரியை இந்த ரியல்மி பி4எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து இருக்கிறது.
இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor), இன்பிராரெட் ரிமோட் கன்ட்ரோல் (Infrared Remote Control) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஹைப்பர் விஷன்+ ஏஐ சிப் (Hyper Vision+ AI Chip) மற்றும் ஏஐ கேமிங் பார்ட்னர் சப்போர்ட் கொண்ட மாடலாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications
