Home
Mobile

வாங்குனா இப்படி ஒன்னு வாங்கனும்.. 8000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. எந்த மாடல்?

ரியல்மி பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பட்ஜெட் பிரியர்களும் வெயிட்டிங் மோடில் இருக்கும்படி ரியல்மி பி4எஸ் 5ஜி (Realme P4s 5G) வெளியீடு இருக்கிறது. 8000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுத்து, 144Hz அமோலெட் டிஸ்பிளே, ஓஐஎஸ் கேமரா போன்ற பீச்சர்களுடன் வெளியாக இருக்கிறது. இந்த ரியல்மி பி4எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விவரங்களை பார்க்கலாம்.

இந்திய மார்கெட்டில் வருகிற ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று ரியல்மி பி4எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இந்த வெளியீட்டுக்கு முன்னதாகவே, டிஸ்பிளே, சிப்செட், பேட்டரி மட்டுமல்லாமல், டிசைன் மற்றும் டியூரபிலிட்டி பீச்சர்களும் உறுதி செய்யப்பட்டுவிட்டன. கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற மாடலாக இருக்கும் என்பது பீச்சர்கள் வழியாக தெரிகிறது.

வாங்குனா இப்படி ஒன்னு வாங்கனும்.. 8000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்!

ரியல்மி பி4எஸ் 5ஜி அம்சங்கள் (Realme P4s 5G Specifications): ரியல்மி நிறுவனத்தின் பி சீரிஸ் மாடல்களில் பேட்டரி கேபாசிட்டி எப்போதும் அதிகமாக இருக்கும். ஆகவே, இந்த ரியல்மி பி4எஸ் 5ஜி ஸ்மார்ட்போனிலும் 8000mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சிங்கிள் சார்ஜில் 3 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும்படி இருக்கிறது.

120FPS கேம் பிளேவிலும் 8 மணி நேரங்களுக்கு பேக்கப் கொடுக்கிறது. வெறும் 28 நிமிடங்களில் 50 சதவீத சார்ஜ் செய்து கொள்ளலாம். 6 வருடங்களுக்கு பேட்டரி ஹெல்த் கொடுக்கிறது. 7000mm² விசி லிக்விட் கூலிங் சிஸ்டம் (VC Liquid Cooling System) கொண்ட மாடலாக இந்த ரியல்மி பி4எஸ் 5ஜி இருக்கிறது. ஏஐ கேமிங் பீச்சர்களும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா 5ஜி (Octa Core MediaTek Dimensity 7400 Ultra 5G) சிப்செட் கொண்ட மாடலாக இந்த ரியல்மி பி4எஸ் 5ஜி கிடைக்க இருக்கிறது. ஹைப்பர்விஷன்+ ஏஐ சிப் (HyperVision+ AI Chip) கிடைத்து இருக்கிறது. டிஸ்பிளேவிலும் பிரீமியம் காட்டி இருக்கிறது. 6.78 (1272 x 2772 பிக்சல்கள்) சாம்சங் அமோலெட் (Samsung AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது.

இந்த டிஸ்பிளேவுக்கு 1.5K ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிஆர்10+ (HDR10+) கொடுக்கப்பட்டு உள்ளது. நெட்பிளிக்ஸ் எச்டிஆர் (Netflix HDR) சப்போர்ட் கிடைக்கிறது. பிரீமியம் மாடல்களுக்கு நிகரான டியூரபிலிட்டி கிடைக்கிறது. IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) கொண்ட 50 எம்பி மெயின் கேமராவுடன் இந்த ரியல்மி பி4எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டு இருக்கின்றன. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) எதிர்பார்க்கலாம். பட்ஜெட் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், முந்தைய மாடல்களை வைத்து யூகிக்கலாம்.

இந்தியாவில் ரியல்மி பி4 லைட் 5ஜி மற்றும் ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன்களின் அறிமுக விலை ரூ.15,000 பட்ஜெட்டில் இருந்தது. ஆகவே, இந்த ரியல்மி பி4எஸ் 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.20,000 பட்ஜெட்டுக்குள் எதிர்பார்க்கலாம். ஆரம்ப விலை வேரியண்ட் தள்ளுபடி போக பட்ஜெட்டில் கிடைக்க வாய்ப்புள்ளது. வெளியீட்டுக்கு முன்பு விலை தெரியவரும்.

Best Mobiles in India

English summary
Realme P4s 5G With 8000mAh Battery To Launch in India on August 26 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X