Home
Mobile

தூக்குங்குடா அந்த தங்கத்த.. 8000mAh பேட்டரி.. 80W ஃபாஸ்ட் சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. எந்த மாடல்?

மிட்-ரேஞ்ச் பிரியர்களை அடித்து பிடித்து வாங்க வைக்கும்படியான பட்ஜெட்டில் 8000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், அமோலெட் டிஸ்பிளே மற்றும் ஓஐஎஸ் கேமராவுடன் ரியல்மி பி4எஸ் 5ஜி (Realme P4s 5G) ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. இந்த மாடலின் விலை, விற்பனை மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா சிப்செட் மட்டுமல்லாமல், கேமிங் பிரியர்களுக்கு பிரீமியம் கிராபிக்ஸ் அனுபவம் கொடுக்க ஹைப்பர் விஷன்+ ஏஐ சிப் (Hyper Vision+ AI Chip) கொண்ட மாடலாக இந்த ரியல்மி பி4எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. 14 ஜிபி டைனாமிக் ரேட், 144Hz சாம்சங் டிஸ்பிளே போன்ற மற்ற பீச்சர்களும் பட்டையை கிளப்புகின்றன.

தூக்குங்குடா அந்த தங்கத்த.. 8000mAh பேட்டரி.. 80W ஃபாஸ்ட் சார்ஜிங்!

ரியல்மி பி4எஸ் 5ஜி அம்சங்கள் (Realme P4s 5G Specifications): 6.78 இன்ச் (1272 x 2772 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுக்கிறது. இதுவொரு சாம்சங் எம்14 (Samsung M14) டிஸ்பிளே மாடலாக இருப்பதால், பிரீமியம் அவுட்புட் எதிர்பார்க்கலாம். மேலும், 1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 450 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது.

மேலும், 3000Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு ஏஜிசி டிடி ஸ்டார் டிபிளஸ் (AGC DT Star D+) கவர் கிளாஸ் கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா (Octa Core MediaTek Dimensity 7400 Ultra) சிப்செட்டை இந்த ரியல்மி பி4எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.

ஆர்ம் மாலி ஜி615 ஜிபியு (Arm Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு ரியல்மி யுஐ 7.0 (Realme UI 7.0) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் +256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களுடன் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.

50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொண்ட மாடலாக இந்த ரியல்மி பி4எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. 2 ஆக்சிஸ் ஓஐஎஸ் (OIS) மற்றும் ஆட்டோ போகஸ் (Auto Focus) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. அண்டர்வாட்டர் (Underwater) மோட் கிடைக்கிறது.

மேலும், வழக்கமாக கிடைக்கும் போர்ட்ராய்டு மோட், நைட் மோட், டூயல் வீடியோ மோட் உள்ளிட்ட பீச்சர்களும் கிடைக்கின்றன. 80W அல்ட்ரா சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 8000mAh பேட்டரி கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் ரிமோட் கன்ட்ரோல் (Infrared Remote Control) கிடைக்கும்.

ரியல்மி பி4எஸ் 5ஜி விலை (Realme P4s 5G Price): 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.34,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.37,999ஆகவும் இருக்கிறது. மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.41,999ஆக இருக்கிறது. ரூ.3,000 தள்ளுபடி போக கிடைக்க இருக்கிறது.

எச்டிஎப்சி, ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ கார்டுகளுக்கு இந்த தள்ளுபடி கிடைக்க இருக்கிறது. வருகிற செப்டம்பர் 3ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்யலாம். எலக்ட்ரிக் சியான் (Electric Cyan) மற்றும் டைட்டானியம் கிரே (Titanium Grey) ஆகிய கலர்களில் இந்த ரியல்மி பி4எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Realme P4s 5G With 50MP Camera Launched in India Sale From September 3 Check Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X