இதுக்கு தான் வெயிட்டிங்.. நாளை அறிமுகமாகும் புது ரியல்மி 5ஜி போன்.. 8000mAh பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?
ரியல்மி பி4எஸ் 5ஜி ((Realme P4s 5G ) ஸ்மார்ட்போனை நாளை (ஆகஸ்ட் 26) இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது ரியல்மி நிறுவனம். குறிப்பாக இந்த போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். இப்போது ஆன்லைனில் வெளியான இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ரியல்மி பி4எஸ் 5ஜி அம்சங்கள் (Realme P4s 5G Specifications): ரியல்மி பி4எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் 1.5கே டிஸ்பிளே உடன் அறிமுகம் செய்யப்படும். இதன் டிஸ்பிளேவில் 1,272 × 2,772 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 பிளஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 6500 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போன் சிந்த திரை அனுபவத்தை வழங்கும்.

மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா 5ஜி சிப்செட் (MediaTek Dimensity 7400 Ultra 5G chipset) உடன் ரியல்மி பி4எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என நான்கு வேரியண்ட்களில் ரியல்மி பி4எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய போனில் உள்ளது.
IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் ரியல்மி பி4எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போனில் உள்ளது.
அதேபோல் ரியல்மி பி4எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 8எம்பி வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா உடன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி அல்லது 32எம்பி கேமரா உடன் ரியல்மி பி4எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
குறிப்பாக யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட வசதிகள் ரியல்மி பி4எஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் மற்றும் வடிவமைப்புக்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி பி4எஸ் 5ஜி போன்.

ரியல்மி பி4எஸ் 5ஜி போன் 8000எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படும். இந்த போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. ஆன்லைனில் வெளியான தகவலின்படி, இந்த போன் ரூ.35000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications