இன்று விற்பனைக்கு வரும் புதிய ரியல்மி 5ஜி போன்.. 8000எம்ஏஎச் பேட்டரி.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனம் கடந்த வாரம் ரியல்மி பி4எஸ் 5ஜி (Realme P4s 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் இன்று முதல் முறையாக பிளிப்கார்ட் தளத்தில் மதியம் 12 மணி அளவில் விற்பனைக்கு வருகிறது. இங்கே இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ரியல்மி பி4எஸ் 5ஜி அம்சங்கள் (realme P4s 5G specifications): 67.8-இன்ச் AMOLED டிஸ்பிளே உடன் ரியல்மி பி4எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2772×1272 பிக்சல்ஸ், 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 100% டிசிஐ பி3 கலர் காமட் (DCI P3 Colour Gamut), ஏஜிசி டிடி ஸ்டார் டிபிளஸ் (AGC DT Star D+) கவர் கிளாஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா (Octa Core MediaTek Dimensity 7400 Ultra) சிப்செட் உடன் ரியல்மி பி4எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.
ஆர்ம் மாலி ஜி615 ஜிபியு (Arm Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு ரியல்மி யுஐ 7.0 (Realme UI 7.0) மூலம் இந்த ரியல் போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ரியல்மி பி4எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் ரியல்மி பி4எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) உள்ளிட்ட வசதிகள் இந்த போனில் உள்ளன.
IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் ரியல்மி பி4எஸ் 5ஜி போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) போன்ற வசதிகள் புதிய ரியல்மி போனில் உள்ளன.
8000எம்ஏஎச் பேட்டரி உடன் ரியல்மி பி4எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.4, ஜிபிஎஸ், குளோனாஸ், பெய்டோ, யூஎஸ்பி டைப்-சி 2.0 உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் உடன் இந்த போன் வெளியாகி உள்ளது.

ரியல்மி பி4எஸ் 5ஜி விலை
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி பி4எஸ் 5ஜி மாடலின் விலை ரூ.34,999-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி பி4எஸ் 5ஜி மாடலின் விலை ரூ.37,999-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி பி4எஸ் 5ஜி மாடலின் விலை ரூ.41,999-ஆக உள்ளது.
தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.3000 தள்ளுபடியும் உள்ளது. எலக்ட்ரிக் சியான் (Electric Cyan) மற்றும் டைட்டானியம் கிரே (Titanium Grey) ஆகிய கலர்களில் இந்த போனை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications