Home
Mobile

வேற போன் வாங்காதீங்க.. 7000mAh பேட்டரிக்கு மேல.. டைமன்சிட்டி 7400 சிப்செட்.. புது Realme போன்.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனத்தின் அடுத்த மாடலாக ரியல்மி பி4ஆர் 5ஜி (realme P4R 5G) வெளியாக இருக்கிறது. ஏற்கனவே, ரேம், மெமரி மற்றும் கலர் விவரங்கள் கசிந்தன. இப்போது, சிப்செட் மற்றும் வெளியீட்டு விவரங்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. இந்த ரியல்மி பி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்த மாத இறுதியில் ரியல்மி 16டி 5ஜி வெளியாக இருக்கிறது. இதற்கே ரியல்மி பிரியர்கள் குஷியில் இருக்கின்றனர். ஆனால், அடுத்த மாடலுக்கு அந்த நிறுவனம் ரெடியாகிவிட்டது. அடுத்த மாதத்தில் ரியல்மி பி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போனை களமிறக்க திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்மாட்போனின் சிப்செட், ரேம், மெமரி உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

வேற போன் வாங்காதீங்க.. 7000mAh பேட்டரிக்கு மேல.. டைமன்சிட்டி 7400!

ரியல்மி பி4ஆர் 5ஜி அம்சங்கள் (realme P4R 5G Specifications): 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் வெளியாக இருக்கின்றன. சில்வர் கிளார் (Silver Glare), டைட்டானியம் கிளார் (Titanium Glare) மற்றும் லாவெண்டர் கிளார் (Lavender Glare) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 (Octa Core MediaTek Dimensity 7400) சிப்செட்டை இந்த ரியல்மி பி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்க இருக்கிறது. இந்த பீச்சர்களுடன் வருகிற ஜூன் மாதத்தில் வெளியாக இருக்கிறது. மற்ற பீச்சர்கள் மார்கெட்டில் கசியவில்லை. இந்த மாடலுக்கு முன்னதாக ரியல்மி 16டி 5ஜி (realme 16T 5G) வெளியாக இருக்கிறது.

இதில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. ஸ்டார்லைட் ரெட் (Starlight Red), ஸ்டார்லைட் பிளாக் (Starlight Black) மற்றும் அரோரா கிரீன் (Aurora Green) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. மே மாத இறுதியில் இதை எதிர்பார்க்கலாம்.

முன்னதாக வெளியான ரியல்மி பி4 5ஜி (realme P4 5G) ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பீச்சர்களை இப்போது பார்க்க வேண்டி இருக்கிறது. ஏனென்றால், இதில் கிடைத்த பீச்சர்களில் சில ரியல்மி பி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போனிலும் கிடைக்கும். அதேபோல பட்ஜெட் செக்மெண்ட்டையும் தெரிந்து கொள்ளலாம். முதலில் பீச்சர்கள் எப்படி என்பதை பார்க்கலாம்.

ரியல்மி பி4 5ஜி அம்சங்கள் (realme P4 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 Ultra 4nm) சிப்செட்டை இந்த ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது.

மேலும், எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) கிடைக்கிறது. ஆகவே, ரியல்மி பி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) எதிர்பார்க்கலாம். 50 எம்பி மெயின் கேமரா + ஓவி50டி40 சென்சார் கிடைக்கிறது.

8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் உள்ளது. 16 எம்பி செல்பீ கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்480 (Sony IMX480) சென்சார் கிடைக்கிறது. இதே கேமரா சிஸ்டம், ரியல்மி பி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போனில் கிடைக்க வாய்ப்புள்ளது. 7000mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. ஆகவே, பெரிய பேட்டரி ரியல்மி பி4ஆர் 5ஜி மாடலில் கிடைக்கலாம்.

ரூ.18,499 பட்ஜெட்டில் ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய மார்கெட்டில் வெளியாகியது. அறிமுக சலுகையில் ரூ.14,999 விலைக்கு கிடைத்து. ஆகவே, ரூ.20,000 பட்ஜெட்டுக்குள் இந்த ரியல்மி பி4ஆர் 5ஜி வெளியாக வாய்ப்புள்ளது. மேலும், மலிவாக வெளியாகவும் வாய்ப்புகள் இருக்கிறது. ஜூன் மாதத்துக்கு முன்பாக தெரியவரும்.

Best Mobiles in India

English summary
Realme P4R 5G With Dimensity 7400 Chipset Launching in India Soon Expected Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X