Home
Mobile

ரூ.44999 இல்ல ரூ.15000 தான்.. 3 நாள் தாங்கும் 8000mAh பேட்டரி.. புது Realme 5ஜி போன்.. எந்த மாடல்?

ரியல்மி (Realme) நிறுவனமானது, பேட்டரியை மையமாக கொண்ட ஒரு புதிய ஸ்மார்ட்போனை (New battery focused smartphone) வருகிற ஜூன் 10 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. அது ரியல்மி பி4ஆர் 5ஜி (Realme P4R 5G) ஸ்மார்ட்போனாகும்.

வெளியீட்டு தேதி உடன் சேர்த்து இந்நிறுவனம் ரியல்மி பி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்களையும் உறுதி செய்துள்ளது. மறுகையில் இந்த ஸ்மார்ட்போனின் பாக்ஸ் ப்ரைஸ் ஆன்லைனில் லீக் ஆகி பேசுபொருளானது. ஏனென்றால் அது ரூ.44,999 என்கிற விலை நிர்ணயத்தை சுட்டிக்காட்டியது.

ரூ.44999 இல்ல ரூ.15000 தான்.. 3 நாள் தாங்கும் 8000mAh பேட்டரி!

இது ஆரம்பத்தில் எதிர்பார்த்ததை விட மிகவும் அதிகமான விலை நிர்ணயமாகும் ஆனால் இந்த பாக்ஸ் ப்ரைஸ் உண்மையானதாக இருக்காது என்று கூறும் இரண்டு வெவ்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஒன்று - இது ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வரும் என்றும், இது ரியல்மி 16டி ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷன் ஆக இருக்கலாம் என்றும் கூறுகிறது

இன்னொன்று - இந்தியாவில் ரியல்மி பி4ஆர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை இருக்கும் என்று கூறுகிறது. இப்படி யூகங்களும் பல உள்ளன. அசல் விலை ஜூன் 10 ஆம் தேதி அன்று நடைபெறும் அதிகாரப்பூர்வ வெளியீட்டின் போது அறிவிக்கப்படும். ஜூன் 10 அன்று இந்தியாவில் வெஅறிமுகமான பின்னர், இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் வாங்க கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது

ரியல்மி பி4ஆர் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன? இந்த ஸ்மார்ட்போன், டைட்டேனியம் க்ளேர் (Titanium Glare), சில்வர் க்ளேர் (Silver Glare) மற்றும் லாவெண்டர் க்ளேர் (Lavender Glare) ஆகிய 3 கலர்களில் அறிமுகம் செய்யப்படும் என்று ரியல்மி உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் கஸ்டமைசபிள் பல்ஸ் லைட் (Customizable Pulse Light) மற்றும் ஏஐ பவர் லைட் சிஸ்டம் (AI Power Light system) இடம்பெறும். இது கேமிங், மியூசிக் மற்றும் இன்கம்மிங் அலெர்ட்களுக்கு இன்டர்ஆக்டிவ் நோட்டிபிகேஷன்களை (Interactive notifications) வழங்கும்.

ரியல்மி பி4ஆர் ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய சிறப்பம்சம் - அதன் பெரிய 8000mAh டைட்டேனியன் பேட்டரி ஆகும். இது ஒரே சார்ஜில் மூன்று நாட்கள் வரை பேட்டரி பயன்பாட்டை வழங்கும் என்று ரியல்மி கூறுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது.

மேலும், இது ஏஐ அடிப்படையிலான பவர் மேனேஜ்மென்ட் அம்சங்கள் மற்றும் பேட்டரி ஹெல்த் இன்ஜின் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. ரியல்மி நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த தொழில்நுட்பங்கள் ஏழு வருட பயன்பாட்டிற்கு பிறகும் 80 சதவீதம் வரை பேட்டரி ஆரோக்கியத்தை பராமரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த ஸ்மார்ட்போன் பைபாஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது. இது கேமிங் அமர்வுகளின் போது பேட்டரிக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுக்காமல், டிவைஸிற்கு நேரடியாக பவர் வழங்க அனுமதிக்கிறது. மேலும், ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு, மற்ற டிவைஸ்களை சார்ஜ் செய்ய, இந்த ஸ்மார்ட்போனை ஒரு பவர் பேங்காக செயல்பட வைக்கிறது.

கடைசி சுவாரசியம் இந்த ஸ்மார்ட்போனின் கேமராக்களில் உள்ளது. ரியல்மி பி4ஆர் ஸ்மார்ட்போனின் கேமராக்களை பொறுத்தவரை இது 50 மெகாபிக்சல் ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் கேமராவை கொண்டிருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன், முன்புற மற்றும் பின்புற கேமராக்கள் இரண்டிலும் மோஷன் போட்டோ (Motion Photo) செயல்பாட்டை ஆதரிக்கும்.

Best Mobiles in India

English summary
Realme P4R 5G With 8000mAh Battery Expected India Price is Rs 15000 to 20000 Launching on June 10
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X