Home
Mobile

வாடா Realme சிங்கக்குட்டி.. 8.8mm ஸ்லிம் டிசைனில் 8000mAh பேட்டரி 5ஜி போன்.. ஆபர் விலையில் ஜூன் 17-ல் SALE!

8000mAh பேட்டரி உடன் ரியல்மி நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஆக ரியல்மி பி4ஆர் 5ஜி (Realme P4R 5G) மாடல், இன்று (ஜூன் 10) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. என்ன விலை? என்ன அம்சங்கள்? எப்போது விற்பனை? என்னென்ன ஆபர்? யாரெல்லாம் நம்பி வாங்கலாம்? இதோ விவரங்கள்:

ரியல்மி பி4ஆர் 5ஜி முக்கிய அம்சங்கள்: இந்த ஸ்மார்ட்போன் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடனான 8000mAh பேட்டரியை கொண்டுள்ளது. மேலும் இது 6.8-இன்ச் அளவிலான பெரிய எச்டி பிளஸ் டிஸ்பிளேவையும் கொண்டுள்ளது. இது 50எம்பி ஏஐ கேமராவையும் பேக் செய்கிறது.

8.8mm ஸ்லிம் டிசைனில் 8000mAh பேட்டரி 5ஜி போன்!

ரியல்மி பி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை: 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் பேஸிக் வேரியண்ட்டின் விலை ரூ.18,999 என்றும், 6ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ஆப்ஷனின் விலை ரூ.22,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

ரியல்மி பி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை மற்றும் சலுகைகள்: இந்த ஸ்மார்ட்போன் டைட்டானியம் கிளேர் (Titanium Glare), சில்வர் கிளேர் (Silver Glare) மற்றும் லாவெண்டர் கிளேர் (Lavender Glare) ஆகிய 3 கலர்களில் வருகிற ஜூன் 17 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக சலுகையாக ரூ.2000 தள்ளுபடி மற்றும் 3 மாதங்களுக்கான நோ காஸ்ட் இஎம்ஐ ஆகியவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ரியல்மி பி4ஆர் ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- 6.8-இன்ச் HD+ LCD டிஸ்பிளேவை கொண்டுள்ளது
- இது 1200 நிட்ஸ் (nits) பீக் ப்ரைட்னஸ் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட்டை (refresh rate) கொண்டுள்ளது.
- மீடியாடெக் டிமென்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் மூலம் இயங்குகிறது
- 14GB வரை டைனமிக் ரேம் (Dynamic RAM) மற்றும் 256GB வரை ஸ்டோரேஜ் இணைக்கப்பட்டுள்ளது.

- 50MP AI-ஆதரவு கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப்
- 8MP செல்பீ கேமரா
- இவ்விரு கேமராக்களிலும் 'மோஷன் போட்டோ' (Motion Photo) வசதி உள்ளது. மேலும், படத்தின் தரத்தை மேம்படுத்தவும் போட்டோ எடிட்டிங்கை எளிதாக்கவும் AI Eraser 2.0, AI Ultra Clarity, AI Unblur மற்றும் AI Portrait Glow போன்ற பல்வேறு AI டூல்களையும் Realme வழங்குகிறது.

- 8,000mAh திறன் கொண்ட பெரிய பேட்டரி. இது மூன்று நாட்கள் வரை பேட்டரி லைஃப் வழங்கும் என்று கூறப்படுகிறது.
- இந்த போனில் 45W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் வசதிகளும் உள்ளன.
- 5,300mm² AirFlo VC கூலிங் சிஸ்டம்
- ராணுவத் தரத்திலான உறுதித்தன்மை சான்றிதழ் (Military Grade durability)

- தூசி மற்றும் நீர் புகாத IP65 பாதுகாப்பு
- பின்புறத்தில் AI Pulse Light LED இண்டிகேட்டர்
- Realme UI 7.0 ஓஎஸ்-ல் இயங்குகிறது
- இதற்கு 2 ஓஎஸ் மேம்படுத்தல்கள் மற்றும் 3 ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் (security patches) வழங்கப்படும்.

கிஸ்பாட் கருத்து: ரியல்மி பி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போனை யாரெல்லாம் நம்பி வாங்கலாம்? ரூ.18,999 என்கிற ஆரம்ப விலையில், பெரிய பேட்டரி, மென்மையான டிஸ்பிளே மற்றும் ஒட்டுமொத்தமாக சீரான அம்சங்களை கொண்டிருப்பதன் மூலம் ரியல்மி பி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் சற்று தனித்து நிற்கிறது என்றே கூறலாம்

அம்சங்களை பார்க்கும்போது, ​​மற்ற அனைத்தையும் விட பேட்டரி திறனுக்கே முன்னுரிமை அளிக்கும் பயனர்களை இது முக்கியமாகக் குறிவைத்துள்ளது என்பது தெளிவாகிறது. வெளிப்புற செயல்பாடுகள் அல்லது நீண்ட தூர பயணங்களின்போது நம்பகமான பேட்டரி திறன் தேவைப்படுபவர்களுக்கு, பட்ஜெட் விலைப்பிரிவில் இது ஒரு சிறந்த தேர்வாக அமையலாம். எனவே, பேட்டரி திறன் உங்களுக்கு மிக முக்கியமான விஷயமாக இருந்தால், நீங்கள் தாராளமாக ரியல்மி பி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போனை தேர்வு செய்யலாம்.

Best Mobiles in India

English summary
Realme P4R 5G With 14GB Dynamic RAM 50MP AI Camera 8000mAh Battery Launched in India Sale Date Price Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X