நாளை விற்பனைக்கு வரும் புதிய Realme 5ஜி போன்.. 8000mAh பேட்டரி.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனம் கடந்த வாரம் ரியல்மி பி4ஆர் 5ஜி (realme P4R 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போனை நாளை மதியம் 12 மணி அளவில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வர உள்ளது. இப்போது இந்த போனின் விலை, சலுகைகள் மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ரியல்மி பி4ஆர் 5ஜி அம்சங்கள் (realme P4R 5G Specifications): 6.8-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ரியல்மி பி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate), 1200 நிட்ஸ் பிரைட்னஸ், 180Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உள்ளன.

தரமான ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது.
6ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் ரியல்மி பி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.
realme UI 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மூலம் இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) வசதியும் இந்த ரியல்மி போனில் உள்ளது. டைட்டானியம் கிளேர் (Titanium Glare), சில்வர் கிளேர் (Silver Glare) மற்றும் லாவெண்டர் கிளேர் (Lavender Glare) ஆகிய 3 கலர்களில் இந்த போனை வாங்க முடியும்.
50எம்பி ரியர் கேமரா உடன் ரியல்மி பி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant)கொண்டுள்ளது ரியல்மி பி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன். இதுதவிர MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

8000mAh பேட்டரி உடன் ரியல்மி பி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
ரியல்மி பி4ஆர் 5ஜி விலை
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி பி4ஆர் 5ஜி மாடலின் விலை ரூ.18,999-ஆக உள்ளது.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி பி4ஆர் 5ஜி மாடலின் விலை ரூ.20,999-ஆக உள்ளது.
4ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி பி4ஆர் 5ஜி மாடலின் விலை ரூ.22,999-ஆக உள்ளது.
தேர்வு செய்ய்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது.


Click it and Unblock the Notifications