Home
Mobile

மிரட்டி விட்டாப்ல.. 8.8 மிமீ பாடியில் 8000mAh பேட்டரி.. 14GB ரேம்.. 50MP கேமரா.. புது Realme 5G ஸ்மார்ட்போன்!

இந்தியாவில் செக்மெண்ட் பர்ஸ்ட் 8000mAh பேட்டரி கொண்ட மாடலாக ரியல்மி பி4ஆர் 5ஜி (realme P4R 5G) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. பேட்டரி மட்டுமல்லாமல், செக்மெண்ட் ஃபாஸ்டஸ்ட் சார்ஜிங் கொடுக்கிறது. இப்படி ஒட்டுமொத்தமாகவே கேமிங் பிரியர்களை தட்டித்தூக்கி இருக்கிறது என்றே சொல்லலாம்.

10001mAh பேட்டரியுடன் வெளியான ரியல்மி பி4 பவர் 5ஜி (realme P4 Power 5G) ஸ்மார்ட்போனுக்கு பிறகு பெரிய பேட்டரி கொண்ட மாடல்களை களமிறக்குவதில் ரியல்மி இந்தியா நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. இதில் புதிய மாடலாக ரியல்மி பி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போனை வருகிற ஜூன் 10ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

மிரட்டி விட்டாப்ல.. 8.8 மிமீ பாடியில் 8000mAh பேட்டரி.. 14GB ரேம்!

இந்த அறிமுகத்துக்கு முன்னதாகவே கிட்டத்தட்ட முழு பீச்சர்களும் உறுதி செய்யப்பட்டுவிட்டன. பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், சிப்செட் மட்டுமல்லாமல், கலர் மற்றும் டிசைன் விவரங்களும் ரியல்மி மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் உறுதியாகி இருக்கின்றன. இதனிடையே பட்ஜெட் விவரங்களும் மார்கெட்டில் கசிந்து, எதிர்பார்ப்பை எகிறவிட்டுள்ளது.

ரியல்மி பி4ஆர் 5ஜி அம்சங்கள் (realme P4R 5G Specifications): 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 8000mAh பேட்டரியை இந்த ரியல்மி பி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. சிங்கிள் சார்ஜில் 3 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும். இந்த செக்மெண்ட்டில் 5300எம்எம் ஏர்ப்ளோவ் விசி கூலிங் (AirFlow VC Cooling) கொண்ட மாடலாகவும் இது இருக்கிறது.

இந்த பெரிய பேட்டரி இருந்தும் 8.8 எம்எம் தடிமன் மட்டுமே கொடுத்துள்ளது. 7 வருடங்களுக்கு பேட்டரி ஹெல்த் கொடுக்கப்படுகிறது. 4 லேயர் பேட்டரி பாதுகாப்பு கிடைக்கிறது. ஆகவே, ஹை மற்றும் லோவ் டெம்ப்ரேச்சர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. பிளாட் கம்பிரஷன் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. ஓவர் சார்ஜிங் புரொடெக்சன் கிடைக்கிறது.

மிரட்டி விட்டாப்ல.. 8.8 மிமீ பாடியில் 8000mAh பேட்டரி.. 14GB ரேம்!

மேலும், 1 மீட்டர் டிராப் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. இதுபோக கேமிங் பிரியர்களுக்கு பயன்படும்படி பைபாஸ் சார்ஜிங் (Bybass Charging) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 27W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. ஒன் டேப் கூலிங் (One Tap Cooling) சப்போர்ட் கிடைக்கிறது. 1200 நிட்ஸ் அல்ட்ரா சன்லைட் டிஸ்பிளே கிடைக்கிறது.

மேலும், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. ரியல்மி யுஐ 7.0 (Realme UI 7.0) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 5ஜி (Octa Core MediaTek Dimensity 6300 5G) சிப்செட்டை கொடுத்து இருக்கிறது. 48 மாதங்களுக்கு ப்ளூயன்சி கேரண்டி கொடுக்கப்பட்டு உள்ளது.

14 ஜிபி டைனாமிக் ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட மாடலாக ரியல்மி பி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. மிலிட்டரி கிரேடு புரொடெக்சன் (எம்ஐஎல்-எஸ்டிடி 810எச்) கொடுக்கப்பட்டு உள்ளது. IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. 50 எம்பி டூயல் ஏஐ கேமரா (Dual AI Camera) கொடுக்கப்பட்டு உள்ளது.

ஏஐ பல்ஸ் லைட் (AI Pluse Light) கொடுக்கப்பட்டு உள்ளது. ஏஐ போர்ட்ராய்டு க்ளோவ் (AI Portrait Glow), ஏஐ எரைசர் (AI Eraser) கிடைக்கிறது. சில்வர் கிளார் (Silver Glare), டைட்டானியம் கிளார் (Titanium Glare) மற்றும் லாவெண்டர் கிளார் (Lavender Glare) ஆகிய மூன்று கலர்களில் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்களுடன் ரூ.20,000 பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
realme P4R 5G Launching On June 10 in India Featuring Massive 8000mAh Battery Under Rs 20000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X