ஆகஸ்ட் 20 உறுதி.. 7000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. இந்தியாவுக்கு வரும் புதிய ரியல்மி 5ஜி போன்.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி பி4 ப்ரோ (realme P4 Pro) மற்றும் ரியல்மி பி4 (realme P4) ஸ்மார்ட்போன்களை வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன்கள் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பல புதிய அம்சங்களுடன் வெளிவரும். மேலும் தற்போது ரியல்மி பி4 ப்ரோ போனின் முக்கிய அம்சங்கள் வெளியாகி உள்ளது. இது குறித் தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ரியல்மி பி4 ப்ரோ அம்சங்கள் (realme P4 Pro specifications): புதிய ரியல்மி பி4 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.8-இன்ச் 1.5கே குவாட் கர்வ்ட் அமோலெட் (quad-curved AMOLED) டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தைக் கொண்டு ரியல்மி பி4 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 பிராசஸர் (Snapdragon 7 Gen 4 processor) உடன் ரியல்மி பி4 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனில் கேமிங் மற்றும் வீடியோ ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ள பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் ரியல்மி பி4 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய ரியல்மி போனில் உள்ளது.
குறிப்பாக 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ரியல்மி பி4 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போனில் உள்ளது.
அதேபோல் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த புதிய ரியல்மி பி4 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதேபோல் இந்த போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor)வசதியும் உள்ளது. பின்பு யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உடன் இந்த ரியல்மி பி4 ப்ரோ போன் வெளியாகும்.
அதுவும் 7000mAh பேட்டரி வசதியுடன் ரியல்மி பி4 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த புதிய ரியல்மி போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








