12 மணி நேரத்துக்கு.. முழுசா ரூ.5,000 ஆஃபர்.. 7000mAh பேட்டரி.. 80W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி தளங்களில் 12 மணி நேர சிறப்பு விற்பனையில் ரூ.5,000 சலுகை விலையில் ரியல்மி பி4 ப்ரோ 5ஜி (Realme P4 Pro 5G) கிடைக்கிறது. அமோலெட் டிஸ்பிளே, 7000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி மெயின் கேமரா போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட் கொண்ட இந்த ரியல்மி பி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.24,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.26,999ஆகவும் இருக்கிறது. மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.28,999ஆக இருக்கிறது. இந்த விலையில் ரூ.3,000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு மூலம் இதை பெற்று கொள்ளலாம். இதுபோக உங்களது பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்தால், அந்த எக்ஸ்சேஞ்ச் வேல்யூ போக கூடுதலாக ரூ.2,000 போனஸ் கொடுக்கப்படும். ஆகவே, மொத்தமாக ரூ.5,000 ஆஃபர் போக இந்த ரியல்மி பி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்து கொள்ள முடியும்.
ரூ.19,999 பட்ஜெட்டில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டை வாங்கி கொள்ளலாம். அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டை ரூ.21,999 பட்ஜெட்டிலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டை ரூ.23,999 பட்ஜெட்டிலும் வாங்கி கொள்ளலாம்.
இந்த ஆஃபர் விலையில் வாங்கி கொள்ள 12 மணி நேரம் இருக்கிறது. அதாவது, ஆகஸ்ட் 29ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையில் மட்டுமே கொடுக்கப்படும். ஆகவே, இந்த 12 மணி நேரத்துக்குள் ஆர்டர் செய்து கொள்ளுங்கள். இப்போது, ரியல்மி பி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

ரியல்மி பி4 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Realme P4 Pro 5G Specifications): இந்த ரியல்மி ஸ்மார்ட்ரோனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 4 4nm) சிப்செட் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப அட்ரினோ 722 ஜிபியு (Adreno 722 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
6.8 இன்ச் (2800 x 1280 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 4608Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பு பெற்று கொள்ளலாம்.
இந்த ரியல்மி பி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி மற்றும் சோனி ஐஎம்எக்ஸ்896 (SONY IMX896) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. மேலும், 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 50 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.
இந்த செல்பீ கேமராவில் ஓம்னிவிஷன் ஓவி50டி (OV50D) சென்சார் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. இந்த பீச்சர்களுக்கு ஏற்ப பேக்கப் கொடுக்க 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரி கிடைக்கிறது. மேலும், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








