Home
Mobile

ஆக.27 முதல் ஆர்டர் பிச்சுக்குமே.. 7000mAh பேட்டரி, 50MP OIS கேம், 80W சார்ஜிங்.. Realme புதிய 5G போன்!

ரியல்மி நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களாக ரியல்மி பி4 சீரீஸ் இன்று (ஆக.20) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த சீரீஸின் கீழ் ரியல்மி பி4 5ஜி (Realme P4 5G) மற்றும் ரியல்மி பி4 ப்ரோ 5ஜி (Realme P4 Pro 5G) என 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன

ரியல்மி பி4 5ஜி, ரியல்மி பி4 ப்ரோ 5ஜி - முக்கிய அம்சங்கள்: இரண்டுமே ஏஐ ஆதரவு உடனான 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராக்களை கொண்டுள்ளன மற்றும் இரண்டு மாடல்களுமே 7000mAh பேட்டரி உடன் வருகின்றன; கூடவே 80W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கின்றன.

Realme புதிய 5G போன்.. ஆக.27 முதல் ஆர்டர் பிச்சுக்குமே!

வெண்ணிலா மாடல் ஆனது (அதாவது ரியல்மி பி4 5ஜி மாடல் ஆனது) மீடியாடெக் டைமன்சிட்டி 7400 சிப்செட் (MediaTek Dimensity 7400 SoC) ஆல் இயக்கப்படுகிறது, அதே நேரத்தில் ப்ரோ வேரியண்ட் ஆனது (அதாவது ரியல்மி பி4 ப்ரோ 5ஜி மாடல் ஆனது) ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 (Snapdragon 7 Gen 4) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

இக்கட்டுரையில் ரியல்மி பி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம், விற்பனை தேதி மற்றும் விற்பனை சலுகைகள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்தியாவில் ரியல்மி பி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.24,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இதேபோல் ரியல்மி பி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8GB ரேம் + 256GB ஸ்டரோஜ் மற்றும் 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.26,999 மற்றும் ரூ.28,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது பிர்ச் வுட், டார்க் ஓக் வுட் மற்றும் மிட்நைட் ஐவி ஆகிய கலர்களில் வாங்க கிடைக்கும்

அறிமுக சலுகைகளை பொறுத்தவரை ரியல்மி பி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளின் கீழ் ரூ.3,000 தள்ளுபடி, ரூ.2,000 எக்ஸ்சேஞ்ச் சலுகை மற்றும் மூன்று மாதங்களுக்கு நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தை பெறலாம். ரியல்மி பி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வருகிற ஆகஸ்ட் 27 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வரும்.

ரியல்மி பி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- 6.8-இன்ச் FHD+ (1080 × 2800 பிக்சல்ஸ்) AMOLED 4D கர்வ் பிளஸ் டிஸ்பிளே
- 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 6500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன்
- ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட்
- 12GB வரை LPDDR4X ரேம் மற்றும் 256GB வரை UFS 3.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்

- Android 15 அடிப்படையிலான Realme UI 6 ஓஎஸ்
- AI ஆதரவு உடனான ஹைப்பர் விஷன் சிப்செட்
- வெப்ப மேலாண்மைக்காக 7,000 சதுர மிமீ ஏர்ஃப்ளோ விசி கூலிங் சிஸ்டம்
- AI லேண்ட்ஸ்கேப், AI ஸ்னாப் மோட், AI பார்ட்டி மோட் மற்றும் AI டெக்ஸ்ட் ஸ்கேனர் உள்ளிட்ட பல AI அம்சங்கள்

- ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் 50-மெகாபிக்சல் சோனி IMX896 பிரைமரி சென்சார்
- 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர்
- முன்பக்கத்தில் 50-மெகாபிக்சல் OV50D செல்பீ சென்சார்
- முன் மற்றும் பின்புற கேமராக்கள் இரண்டும் 60fps இல் 4K வீடியோ ரெக்கார்ட் செய்யும்

- 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் சார்ஜிங்
- 7,000mAh பேட்டரி
- 5ஜி, 4ஜி, வைஃபை 6, ப்ளூடூத் 5.4, GPS மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP65 மற்றும் IP66 ரேட்டிங்
- இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- அளவீட்டில் 7.68 மிமீ தடிமன்
- எடையில் 187 கிராம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme P4 Pro 5G With 7000mAh Battery Snapdragon 7 Gen 4 Launched Price Rs 24999 Sale Starts on Aug 27
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X