ஸ்மார்ட்போனுனா இப்படி இருக்கனும்.. 10001mAh பேட்டரி.. SONY கேமரா.. DUAL சிப்செட்.. 3 OS அப்டேட்.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனத்தின் அதிக பேட்டரி கேபாசிட்டி கொண்ட மாடலாக ரியல்மி பி4 பவர் (Realme P4 Power) ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது. ரியல்மி தளத்தில் பேட்டரி, டிசைன், சிப்செட், ஓஎஸ் அப்டேட் உள்ளிட்ட முக்கிய பீச்சர்கள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டுள்ளன. அதேபோல விலை விவரங்களும் மார்கெட்டில் வெளியாகி இருக்கின்றன. இதுகுறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் இன்று (ஜனவரி 29) மதியம் 12 மணிக்கு ரியல்மி பி4 பவர் ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி இந்தியா தளங்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இந்த தளங்களில் முக்கிய பீச்சர்கள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளன. இதை பார்த்துவிட்டு, மார்கெட்டில் கசிந்த விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இந்தியாவில் வெளியாகும் பெரிய பேட்டரி போன் இதுவாகும்.

ரியல்மி பி4 பவர் அம்சங்கள் (Realme P4 Power Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 Ultra 4nm) சிப்செட்டை இந்த ரியல்மி பி4 பவர் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. டிஸ்பிளேவில் ஸ்மூத் மோஷன், கிளாரிட்டி மற்றும் விவிட் விசுவல்களை கொடுக்க ஹைப்பர் விஷன் பிளஸ் (Hyper Vision +) என்னும் ஏஐ சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ரியல்மி யுஐ 7.0 (Realme UI 7.0) கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் ஐஸ் கியூப் ஐகான்கள், ப்ரீத்திங் டாக் உள்ளிட்ட அப்டேட்டட் யுஐ கிடைக்கிறது. 3 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்கள் (Android Updates), 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. சோனி ஐஎம்எக்ஸ்882 (SONY IMX882) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது.
இந்த கேமராவுக்கு ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கிடைக்கிறது. மேலும், அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு ஏஐ எடிட் ஜீனீ (AI Edit Genie) மட்டுமல்லாமல், 3டி எமோஜி (3D Emoji), கார்டூன் ஷாட் (Cartoon Shot) மற்றும் மாடலிங் போட்டோஷூட் (Modeling PhotoShoot) போன்ற பீச்சர்களை இந்த ரியல்மி பி4 பவர் கொண்டுள்ளது.

ஏஐ லைட் மீ (Ai Light Me), ஏஐ ஸ்டைல் மீ (Ai Style Me) உள்ளிட்ட பீச்சர்களும் உள்ளன. வீடியோவில் ஏஐ இன்ஸ்டன்ட் கிளிப் (Ai Instant Clip) கிடைத்துள்ளது. ஏஐ ஸ்மார்ட் ரீப்ளை (Ai Smart Reply), ஏஐஎம் அசிஸ்ட் (Aim Assist) கொடுக்கப்பட்டு உள்ளது. டிரான்ஸ் சில்வர் (Trans Silver), டிரான்ஸ் ஆரஞ்ச் (Trans Orange), டிரான்ஸ் ப்ளூ (Trans Blue) ஆகிய கலர்களில் இந்த ரியல்மி பி4 பவர் ஸ்மார்ட்போன் கிடைக்க உள்ளது.
6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1.07 பில்லியன் கலர் டெப்த் கொண்ட டிஸ்பிளே கிடைக்க உள்ளது. 144 Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர்10 பிளஸ் (HDR 10+) கிடைத்துள்ளது. கேமிங் பிரியர்களுக்காக கேம் ஏஐ ஹைப்பர் கிளாரிட்டி, கேம் ஏஐ ஹைப்பர் மோஷன் மற்றும் கேம் ஏஐ ஆல்வேஸ் ஆன் எச்டிஆர் கிடைத்துள்ளது. மேலும், 90 FPS பிஜிஎம்ஐ அவுட்புட் கிடைக்கிறது.
80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 10001mAh பேட்டரி கிடைக்கிறது. 27W ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் பூஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. பைபாஸ் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ரூ.37,999 பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது. இருப்பினும், பேஸ் வேரியண்ட்டானது, பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.30,000 பட்ஜெட்டில் கிடைக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








