10001mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. திடீர் ரூ.1,400 ஆஃபர் விலையில் Realme P4 Power 5G ஸ்மார்போன்.. என்ன விலை?
பிளிப்கார்ட் தளத்தில் ஆஃபர் விலையில் கிடைக்கும் இந்த 10001mAh பேட்டரி கொண்ட ரியல்மி பி4 பவர் 5ஜி போனுக்கு ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 மெகா பிக்சல் கேமரா, அமோலெட் டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. இந்த ஆஃபர் விலையுடன் பீச்சர்களையும் பார்த்துவிடுவோம்.
8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொடுக்கும் மாடலின் விலை இப்போது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.27,999 ஆக இருக்கிறது. இந்த விலையே 15 சதவீத தள்ளுபடி போக கிடைக்கிறது. ஆனால், கூடுதல் ஆஃபராக தகுதியான கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,409 ஆஃபரும் கிடைக்கிறது. இதை பெற்றால், ரூ.26,599 விலையில் வாங்கி கொள்ளலாம்.

இந்த ரேம் மற்றும் ஸ்டோரேஜ் மாடலை தவிர்த்து, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஸ்டோரேஜ் மாடலும் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. டிரான்ஸ்சில்வர்( TransSilver), டிரான்ஸ்ஆரஞ்ச் (TransOrange) மற்றும் டிரான்ஸ்ப்ளூ (TransBlue) கலர்களில் வாங்கி கொள்ளலாம்.
இதில் குறிப்பிட்ட கலர்களில் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷனில் அவுட் ஆப் ஸ்டாக் இருக்கலாம். 10001mAh பேட்டரியுடன் மிலிட்டரி கிரேடு ஷாக் டெஸ்டில் இந்த ரியல்மி பி4 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் பாஸ் செய்துள்ளது. 5 ஸ்டார் பேட்டரி ரேட்டிங் கொண்ட மாடலாகவும் இருப்பதால், ஹீட் கன்ட்ரோல், ஓவர் சார்ஜிங் கன்ட்ரோல் கிடைக்கும்.
ரியல்மி பி4 பவர் 5ஜி முக்கிய அம்சங்கள்: 10001mAh பேட்டரிக்கு 80W சூப்பர்வூக் சார்ஜிங் வழங்கப்பட்டு உள்ளது. 55W பிபிஎஸ் சார்ஜிங் (PPS Charging), 27W ரிவர்ஸ் சார்ஜிங் (Reverse Charging) மற்றும் ஃபைபாஸ் சார்ஜிங் (Bypass Charging) கிடைத்து இருக்கிறது. பர்ஃபாமென்ஸ் விரும்பும் பிரியர்களுக்காக மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா சிப்செட்டை கொடுத்து உள்ளது.
ஆக்டா கோர், 4என்எம் சிப்செட்டாக உள்ளது. மாலி ஜி615 எம்சி2 ஜிபியு கிடைக்கிறது. ஆகவே, டிஸ்பிளே அவுட்புட் மிட்-பிரீமியமாக இருக்கும். டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. 1280 x 2800 பிக்சல்களுடன் 6.8 இன்ச் அமோலெட் பேனலை கொடுத்து இருக்கிறது. எச்டிஆர் 10 பிளஸ், 1.5K டிஸ்பிளே ரெசொலூஷன் உள்ளது.
மேலும், 144 Hz ரெஃப்ரெஷ் ரேட்டையும், 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸையும் இந்த ரியல்மி பி4 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் பேக் செய்துள்ளது. ஓடிடி பிரியர்களாக இருந்தால், எச்டிஆர் 10+ பிடித்த பீச்சராக இருக்கும். எப்/1.8 அபெர்சர், சோனி ஐஎம்எக்ஸ்82 சென்சார் மற்றும் 2-ஆக்சிஸ் ஓஐஎஸ் உடன் 50 எம்பி பிரைமரி கேமராவை பேக் செய்துள்ளது.
எப்/2.2 அபெர்சருடன் 8 எம்பி அல்ட்பா வைடு கேமராவும் வருகிறது. முன்பக்கத்தில் எப்/2.4 அபெர்சர், சோனி ஐஎம்எக்ஸ்480 சென்சாருடன் 16 எம்பி கேமராவை இந்த ரியல்மி பி4 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 4K ரெக்கார்டிங் செய்து கொள்ளும்படி பிரைமரி கேமரா உள்ளது. 16 எம்பி செல்பீ கேமராவில் 1080p ரெக்கார்டிங் கிடைக்கும்.
ஐபி66 + ஐபி68 + ஐபி69 ரேட்டிங்கிலான டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளது. பாட்டமில் போர்ட் செய்யப்பட்ட ஸ்பீக்கர் உள்ளது. இன்-டிஸ்பிளேவில் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் இன்பிராரெட் சென்ர் வருகிறது. டியூரபிலிட்டி மற்றும் பேட்டரி பேக்கப் அதிகமாக வேண்டுமானால், இந்த ரியல்மி பி4 பவர் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications