SALE பொளந்து கட்டுது.. 10000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி பவர் டேஸ் சேல் (Realme Power Days Sale) என்னும் சிறப்பு விற்பனையில் பவர் சீரிஸ் மாடல்களுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. இதில் ரியல்மி பி4 பவர் 5ஜி (Realme P4 Power 5G), ரியல்மி பி4 5ஜி (Realme P4 5G) மற்றும் ரியல்மி பி4எக்ஸ் 5ஜி (Realme P4x 5G) ஆகிய மாடல்களுக்கு தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.
இந்த சேல் பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் பிப்ரவரி 22ஆம் தேதி வரையில் மட்டுமே நடக்கிறது. பேங்க் டிஸ்கவுண்ட், நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கிடைக்கிறது. ஆகவே, மார்கெட் விலையில் இருந்து மலிவாக வாங்கி கொள்ளலாம். ரியல்மி ஆன்லைன் ஸ்டோர் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் இந்த தள்ளுபடியுடன் சலுகை கிடைக்கிறது.

ரியல்மி பி4 பவர் 5ஜி விலை (Realme P4 Power 5G Price): 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.25,999ஆகவும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.27,999ஆகவும் இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.30,999 ஆகவும் உள்ளது. ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
மேலும், ரூ.2,000 எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மற்றும் 6 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது. 6.77 இன்ச் கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, 144Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. 80W பாஸ்ட் சார்ஜிங் கொண்ட 10001mAh பேட்டரி கிடைக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அள்ட்ரா சிப்செட் உள்ளது. 50 எம்பி மெயின் + 8 எம்பி அல்ட்ரா + 16 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது.
ரியல்மி பி4 5ஜி விலை (Realme P4 5G Price): 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.19,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.21,999ஆகவும் இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.23,999 ஆக உள்ளது. ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட், 3 மாதங்களுக்கு நோ-காஸ்ட் இஎம்ஐ உள்ளது. ரூ.19,999 ஆரம்ப விலைக்கு வாங்கலாம்.
6.77 இன்ச் அமோலெட் டிஸ்பிளே உள்ளது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 144Hz ஹைப்பர்குளோவ் மற்றும் 4,500 நிட்ஸ் பீக் பிரைட்ஸ் கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 5ஜி சிப்செட்டை கொடுத்து உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 16 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 7,000mAh பேட்டரி மற்றும் 80W அல்ட்ரா சார்ஜ் உள்ளது.
ரியல்மி பி4எக்ஸ் 5ஜி விலை (Realme P4x 5G Price): 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 17,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.18,999ஆகவும் உள்ளது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 20,999ஆக இருக்கிறது. ரூ.2,000 டிஸ்கவுண்ட் போக ரூ.15,999 ஆரம்ப விலைக்கு கிடைக்கிறது. 3 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ வருகிறது.
6.72 இன்ச் எல்சிடி டிஸ்பிளே கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா 4என்எம் சிப்செட் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி செகண்டரி கேமரா உள்ளது. 8 எம்பி செல்பீ ஷூட்டரை கொடுத்துள்ளது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. பிப்ரவரி 22ஆம் தேதி வரையில் டிஸ்கவுண்ட் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications