இதை தான் எதிர்பார்த்துட்டு இருந்தோம்.. 10000mAh பேட்டரி.. புது Realme 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி பி4 பவர் 5ஜி (Realme P4 Power 5G) எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது பிளிப்கார்ட்டில் பிரத்யேக மைக்ரோசைட்டில் இந்த புதிய ரியல்மி பி4 பவர் ஸ்மார்ட்போன் காணப்பட்டுள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போன் வரும் நாட்களில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
ரியல்மி பி4 பவர் 5ஜி அம்சங்கள் (Realme P4 Power 5G Specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் குவாட் கர்வ்ட் அமோலெட் (quad-curved AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த ரியல்மி பி4 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் மேலும் இதன் டிஸ்பிளேவில் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7400 (MediaTek Dimensity 7400) சிப்செட் உடன் ரியல்மி பி4 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். அதுவும் இந்த சிப்செட் மேம்பட்ட ஜிபியு மற்றும் சிபியு வேகத்தை வழங்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.
50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி பி4 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் ரியல்மி பி4 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போனுக்கு மூன்று ஒஎஸ் அப்டேட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பாதுகாப்பு அப்டேட்களும் வழங்கப்படும்.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி உடன் ரியல்மி பி4 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

ஆன்லைனில் வெளியான தகவலின்படி, 10000mAh பேட்டரி உடன் இந்த ரியல்மி பி4 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போனில் 3 சதவீத சார்ஜ் இருந்தால் கூட 1 மணி நேரம் 52 நிமிடங்கள் பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போனின் பேட்டரி பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம்.
இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 27W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளது. பின்பு இந்த போனின் எடை 218 கிராம் என்று கூறப்படுகிறது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளதாக தகலல்கள் வெளியாகி உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் ரியல்மி பி4 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
photo credits: croma, Realme


Click it and Unblock the Notifications








