Home
Mobile

கிடுகிடுவென உயர்ந்த ரியல்மி 5ஜி போன் விலை.. 10001mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் தனது 10001எம்ஏஎச் பேட்டரி கொண்ட ரியல்மி பி4 பவர் 5ஜி (Realme P4 Power 5G) ஸ்மார்ட்போனின் விலை உயர்த்தி உள்ளது. அதுவும் இந்த போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த போனின் புதிய விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி பி4 பவர் 5ஜி மாடலின் முந்தைய விலை ரூ.29,999-ஆக இருந்தது. ஆனால் தற்போது இந்த மாடலின் விலை உயர்த்தப்பட்டு ரூ.32,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

கிடுகிடுவென உயர்ந்த ரியல்மி 5ஜி போன் விலை.. எந்த மாடல்?

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி பி4 பவர் 5ஜி மாடலின் முந்தைய விலை ரூ.31,999-ஆக இருந்தது. ஆனால் தற்போது இந்த மாடலின் விலை உயர்த்தப்பட்டு ரூ.34,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி பி4 பவர் 5ஜி மாடலின் முந்தைய விலை ரூ.34,999-ஆக இருந்தது. ஆனால் தற்போது இந்த மாடலின் விலை உயர்த்தப்பட்டு ரூ.37,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ரியல்மி பி4 பவர் 5ஜி அம்சங்கள் (Realme P4 Power 5G Specifications): 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 4D Curve+ HyperGlow டிஸ்பிளே வசதியுடன் இந்த ரியல்மி பி4 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இதன் டிஸ்பிளேவில் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 1.07 பில்லியன் கலர்ஸ், எச்டிஆர் 10 பிளஸ், ஆர்மர்ஷெல் புரொடெக்டன்(ArmorShell Protection) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா (MediaTek Dimensity 7400 Ultra) சிப்செட் உடன் ரியல்மி பி4 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுவும் இந்த சிப்செட் மேம்பட்ட ஜிபியு மற்றும் சிபியு வேகத்தை வழங்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் இந்த போனில் ஹைப்பர்விஷன்+ யுஐ சிப் வசதியும் உள்ளது.

4,613 sq mm ஏர்ஃப்ளோ வேப்பர் சேம்பர் கூலிங் (4,613 sq mm AirFlow vapour chamber) சிஸ்டமை கொண்டுள்ளது இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த ரியல்மி ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

அதுவும் 50எம்பி Sony IMX882 பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி பி4 பவர் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.

அதேபோல் IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் ரியல்மி பி4 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரியல்மி யுஐ 7.0 (realme UI 7.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதியுடன் இந்த ரியல்மி போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

கிடுகிடுவென உயர்ந்த ரியல்மி 5ஜி போன் விலை.. எந்த மாடல்?

குறிப்பாக 10001mAh பேட்டரி உடன் இந்த ரியல்மி பி4 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

டிரான்ஸ்சில்வர்( TransSilver), டிரான்ஸ்ஆரஞ்ச் (TransOrange) மற்றும் டிரான்ஸ்ப்ளூ (TransBlue) நிறங்களில் இந்த போனை வாங்க கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Best Mobiles in India

English summary
Realme P4 Power 5G Gets a Price Hike in India: Check New Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X