யாரு சாமி அவன்.. 10001mAh பேட்டரி.. 80W பாஸ்ட் சார்ஜிங்.. 27W ரிவர்ஸ் சார்ஜிங்.. 3 OS அப்டேட்.. எந்த மாடல்?
இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் அதிக பேட்டரி கேபாசிட்டியுடன் வெளியான ஒட்டுமொத்த மாடல்களையும் தூக்கி சாப்பிடும்படி 10001mAh பேட்டரியுடன் ரியல்மி பி4 பவர் (Realme P4 Power 5G) மாடல் வெளியாக உள்ளது. மேலும், 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 27W ரிவர்ஸ் சார்ஜிங் மட்டுமல்லாமல், பைபாஸ் சார்ஜிங் கொண்டுள்ளது. இந்த ரியல்மி பி4 பவர் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
வருகிற ஜனவரி 29ஆம் தேதி இந்த ரியல்மி பி4 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. ஆகவே, ரியல்மி இந்தியா தளம் மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், டிசைன் மற்றும் ஓஎஸ் விவரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. மற்ற பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் மார்கெட்டில் கசிந்துவிட்டன.

ரியல்மி பி4 பவர் 5ஜி அம்சங்கள் (Realme P4 Power 5G Specifications): ஐஸ் கியூப் ஐகான், மிஸ்டி கிளாஸ் கன்ட்ரோல் சென்டர் மற்றும் பிரீத்திங் டாக் போன்ற பீச்சர்களுடன் ரியல்மி யுஐ 7.0 (Realme UI 7.0) கொடுத்துள்ளது. 3 வருடங்களுக்கான ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களை இந்த ரியல்மி பி4 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது.
டிரான்ஸ் சில்வர் (Trans Sliver), டிரான்ஸ் ஆரஞ்ச் (Trans Orange) மற்றும் டிராஸ் ப்ளூ (Trans Blue) ஆகிய கலர்களில் கிடைக்க உள்ளது. டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கொடுத்துள்ளது. ப்யூர் மேட் பேக் பேனல் (Pure Matte Back Panel) கிடைக்கிறது. ஃபிளாஷ் டார்ட் எம்பலம் (Flash Dart Emblem) இருக்கிறது. 10001mAh பேட்டரியை கொடுத்துள்ளது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், 27W ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங் (Bybass Charging) கொடுத்துள்ளது. மேலும், பூஸ்ட் சார்ஜிங் (Boost Charging) பீச்சர் கிடைக்கிறது. இதில் 25 சதவீத சார்ஜிங் பூஸ்ட் கிடைக்கும். பெரிய பேட்டரி வருவதால், சி-பேக் ப்ரொடெக்சன் போர்டு டிசைன் (C-Pack Protections Board Design) கொண்டுள்ளது. டூயல்-லேயர் கோட்டிங் ப்ராசஸ் (Dual Layer Coating Process) செய்யப்பட்டுள்ளது.
4 வருடங்களுக்கு பேட்டரி ஹெல்த் கிடைத்துள்ளது. 932.6 மணி நேரங்களுக்கு ஸ்டாண்ட்பை பேக்கப் கொடுக்கும். 185.7 மணி நேரங்களுக்கு மியூசிக் பிளேபேக் கொடுக்கும். 21.3 மணி நேரங்களுக்கு நேவிகேஷன் பேக்கப் கொடுக்கும். 32.5 மணி நேரங்களுக்கு யூடியூப் பிளேபேக் கொடுக்கும். 11.67 மணி நேரங்களுக்கு பிஜிஎம்ஐ கேமிங் பேக்கப்பை இந்த பேட்டரி கொடுக்கும்.
மேலும், 72.3 மணி நேரங்களுக்கு கால் பேக்கப் கொடுக்கும். இந்த பீச்சர்கள் மட்டுமே ரியல்மி இந்தியா தளத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளன. மார்கெட்டில் கசிந்த பீச்சர்களை பொறுத்தவரையில், 6.78 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. 144 Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்க உள்ளது. மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா சிப்செட் கொடுக்க இருக்கிறது.
ஹைப்பர் விஷன் கிடைக்க உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் வருகிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் கூடுலாக ஒரு கேமரா கிடைக்கிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்க உள்ளது. ரூ.37,999 பட்ஜெட்டில் கிடைக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








