Home
Mobile

அடிசக்க.. ரூ.12.999 பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. ஐபி64 ரேட்டிங்.. புதிய Realme 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் இன்று இந்தியாவில் ரியல்மி பி4 லைட் 5ஜி (realme P4 Lite 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக கம்மி பட்ஜெட்டில் 7000mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ், பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ரியல்மி பி4 லைட் 5ஜி அம்சங்கள் (realme P4 Lite 5G specifications): 6.8-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் ரியல்மி பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் டிஸ்பிளேவில் 1570×720 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

அடிசக்க.. புதிய Realme 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் உடன் ரியல்மி பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபுயு (ARM Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த புதிய ரியல்மி போனில் உள்ளது.

4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் ரியல்மி பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

realme UI 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு ரியல்மி பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

13எம்பி ரியர் கேமரா உடன் ரியல்மி பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

IP64 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust and splah resistant) உடன் ரியல்மி பி4 லைட் 5ஜி வெளியாகி உள்ளது. மேலும் MIL-STD 810H சர்டிபிகேஷன், டைப்-சி, சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதிகளும் இந்த புதிய ரியல்மி போனில் உள்ளன.

3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack), அல்ட்ரா லீனியர் பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர் (Ultra Linear Bottom-ported Speaker), 300% அல்ட்ரா வால்யூம் ஆடியோ போன்ற அம்சங்கள் உடன் இந்த புதிய ரியல்மி போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனின் எடை 212 கிராம் ஆகும்.

7000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இந்த போனில் உள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ (Galileo), யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

அடிசக்க.. புதிய Realme 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி பி4 லைட் 5ஜி போனின் விலை ரூ.12,999-ஆக உள்ளது. மேலும் இதன் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.13,999 விலையிலும், 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.15,999 விலையிலும் வாங்க முடியம். மொசைக் கிரீன் மற்றும் மொசைக் ப்ளூ நிறங்களில் இந்த போன் வாங்க கிடைக்கும்.

மார்ச் 25-ம் தேதி ரியல்மி பி4 லைட் 5ஜி போனை பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி இணையதளத்தில் வாங்க முடியும் மேலும் இந்த போனின் அறிமுகச் சலுகைகளின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் ரூ. 1,000 தள்ளுபடியைப் பெறலாம். இதுதவிர பல சிறப்பு சலுகைகள் இந்த போனுக்கு கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
realme P4 Lite 5G With 7000mAh battery launched india: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X