Home
Mobile

தூக்குங்கடா அந்த தங்கத்த.. 33 சதவீத ஆஃபரில் 7000mAh பேட்டரி போன்.. 15W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

7000mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி, ஐபி64 ரேட்டிங் போன்ற பீச்சர்களுடன் பட்ஜெட் விலைக்கு வெளியாகிய ரியல்மி பி4 லைட் 5ஜி (Realme P4 Lite 5G) ஸ்மார்ட்போன் நம்ப முடியாத தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டுக்கு 33 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடியுடன் ரூ.13,499 விலைக்கு வாங்கி கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகள் இருந்தால், ரூ.1,150 தள்ளுபடியும் கிடைக்கும். ஆகவே, ரூ.12,349 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

தூக்குங்கடா அந்த தங்கத்த.. 33 சதவீத ஆஃபரில் 7000mAh பேட்டரி போன்!

ரியல்மி பி4 லைட் 5ஜி அம்சங்கள் (Realme P4 Lite 5G Specifications): ஆர்மர்ஷெல் புரொடெக்சன் (ArmorShell Protection) கொண்ட 6.8 இன்ச் (1570 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த ரியல்மி பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. 180Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளது.

மேலும், 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 256 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கொடுக்கப்பட்டுள்ளது. ரியல்மி யுஐ 7.0 (realme UI 7.0) பேஸ்டு ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது. யுனிசோக் சிப்செட்டை எதிர்பார்க்கும் பட்ஜெட்டில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் கிடைக்கிறது.

இந்த பட்ஜெட்டில் லேட்டஸ் ஓஎஸ் மட்டுமல்லாமல், மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த ரியல்மி பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் ஏஐ பூஸ்ட் (AI Boost), ஏஐ ஸ்மார்ட் இமேஜ் (AI Smart Image), ஏஐ எரைசர் 2.0 (AI Eraser 2.0) மற்றும் ஏஐ கிளியர் பேஸ் (AI Clear Face) உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன.

ஏஐ ஸ்மார்ட் இமேஜ் மேட்டிங் (AI Smart Image Matting) உள்ளது. . 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் கேமிங் பிரியர்கள் விரும்பும் ஃபைபாஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. 8.48 எம்எம் தடிமன் பாடியில் 212 கிராம் எடை கொடுத்துள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளது.

3.5 எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. 13 எம்பி பிரைமரி கேமராவை இந்த ரியல்மி பி4 லைட் 5ஜி கொடுக்கிறது. 5 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA / NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac) மற்றும் ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) கிடைக்கிறது. ஜிபிஎஸ் உள்ளது.

இந்த பட்ஜெட்டிலும் பிரீமியம் லுக் கொடுக்கும்படி மோசைக் கிரீன் (Mosaic Green) மற்றும் மொசைக் ப்ளூ (Mosaic Blue) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. அதேபோல எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD 810H) மிலிட்டரி கிரேடு சர்டிபிகேஷன் மற்றும் IP64 ரேட்டிங்குடன் டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Dust & Splash Resistance) வரவேற்க வேண்டியதாக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
realme P4 Lite 5G With 7000mAh Battery Available At 33 Percent Discount on Flipkart Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X