வீட்டுக்கு 2 ஆர்டர்.. ரூ.14,000 பட்ஜெட்ல 7000mAh பேட்டரி Realme 5ஜி போன்.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனத்தின் பி சீரிஸ் மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கின்றன. இதில் ரியல்மி பி4 லைட் 5ஜி (Realme P4 Lite 5G) ஸ்மார்ட்போனானது 7000mAh பேட்டரியுடன் வெளியாகி விற்பனையில் பட்டையை கிளப்பியது. இப்போது, தள்ளுபடி விலையில் கிடைப்பதால், விற்பனை மேலும் சூடு பிடித்துள்ளது.
பிளிப்கார்ட் விற்பனையில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட பேசிக் வேரியண்ட்டின் விலை 25 சதவீத தள்ளுபடி போக ரூ.14,999 ஆக இருக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.800 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.14,199 விலையில் 7000mAh பேட்டரி கொண்ட இந்த ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

7000mAh பேட்டரி மட்டுமல்லாமல், மலிவான விலையிலும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுத்துள்ளது. இதுபோக கேமிங் பிரியர்கள் விரும்பும்படியான பைபாஸ் சார்ஜிங் (Bybass Charging) கொடுக்கப்பட்டு உள்ளது. இது மதர் போர்டுக்கு நேரடியாக பவர் கொடுப்பதால், பேட்டரி ஹீட் கன்ட்ரோல் செய்யப்படுகிறது. இதேபோல மற்ற பீச்சர்களும் மிரளவிடுகின்றன.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட மாடலாக இந்த ரியல்மி பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. ஏஐ பூஸ்ட் (AI Boost), ஏஐ ஸ்மார்ட் இமேஜ் (AI Smart Image), ஏஐ எரைசர் 2.0 (AI Eraser 2.0) மற்றும் ஏஐ கிளியர் பேஸ் (AI Clear Face) பீச்சர்களுடன் ரியல்மி யுஐ 7.0 (realme UI 7.0) கிடைக்கிறது. மோசைக் கிரீன் (Mosaic Green) மற்றும் மொசைக் ப்ளூ (Mosaic Blue) ஆகிய 2 கலர்களில் வாங்கலாம்.
ரியல்மி பி4 லைட் 5ஜி அம்சங்கள் (Realme P4 Lite 5G Specifications): மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட்டை இந்த ரியல்மி பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஆகவே, பட்ஜெட்டிலும் பர்ஃபாமென்ஸ் பக்காவாக இருக்கும்.
144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.8 இன்ச் (1570 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மட்டுமல்லாமல், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுத்துள்ளது. பட்ஜெட் விலையிலும் ஆர்மர்ஷெல் புரொடெக்சன் (ArmorShell Protection) மற்றும் 256 பிபிஐ பிக்சல் டென்சிட்டியை பேக் செய்துள்ளது.
13 எம்பி ரியர் கேமரா மற்றும் எப்/2.2 அபெர்சர் கிடைக்கிறது. மேலும், 1080p வீடியோ ரெக்கார்டிங் கொடுத்து இருக்கிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக எப்/2.0 அபெர்சருடன் 5 எம்பி செல்பீ கேமரா ஷூட்டரை இந்த ரியல்மி பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்களை இந்த ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது.
மேலும், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்கிறது. 5 எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA / NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி உள்ளது. எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD 810H) மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொண்ட மாடலாக இருக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் உள்ளது.


Click it and Unblock the Notifications