Home
Mobile

பிளிப்கார்ட் மிரளுது.. 45 சதவீத ஆஃபரில் Realme 5G ஸ்மார்ட்போன்.. 7000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2026 (Flipkart Big Billion Days Sale 2026) என்னும் சிறப்பு விற்பனையில் ரியல்மி பி4 லைட் 5ஜி (Realme P4 Lite 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. 7000mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங், 144Hz டிஸ்பிளே போன்ற பீச்சர்களை கொண்ட இந்த ரியல்மி பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை பார்க்கலாம்.

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரியுடன் கிடைக்கும் மாடலுக்கு 45 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த தள்ளுபடியுடன் ரூ.15,999 விலைக்கு வாங்கலாம். மேலும், தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.800 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.15,199 விலைக்கு வாங்கி கொள்ளலாம். இந்த ரூ.15,999 விலையானது சமீபத்தில் உயர்த்தப்பட்ட விலையாக இருக்கிறது.

பிளிப்கார்ட் மிரளுது.. 45 சதவீத ஆஃபரில் Realme 5G ஸ்மார்ட்போன்!

ரியல்மி பி4 லைட் 5ஜி அம்சங்கள் (Realme P4 Lite 5G Specifications): ரியல்மி பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் (1570 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசல்யூஷன் கொண்ட இந்த டிஸ்பிளேவானது 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட்டுடன் வருகிறது. மேலும், 256 பிபிஐ பிக்சல் டென்சிட்டியும் உள்ளது.

ப்ராசஸரை பொறுத்தவரை, மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் இதில் இடம்பெற்றுள்ளது. இதனுடன் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் யூனிட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆக்டா கோர் ப்ராசஸர் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் அன்றாட யூசேஜ் மற்றும் கேமிங் செசன்களுக்கு ஏற்ற வகையில் எதிர்பார்க்கும்படி இருக்கிறது.

போட்டோக்களை எடிட் செய்வதற்கும், இமேஜ்களின் குவாலிட்டியை மேம்படுத்துவதற்கும் பல்வேறு ஏஐ பீச்சர்கள் இதில் இடம்பெற்றுள்ளன. ஏஐ பூஸ்ட் (AI Boost), ஏஐ ஸ்மார்ட் இமேஜ் (AI Smart Image), ஏஐ எரைசர் 2.0 (AI Eraser 2.0), ஏஐ கிளியர் பேஸ் (AI Clear Face) மற்றும் ஏஐ ஸ்மார்ட் இமேஜ் மேட்டிங் (AI Smart Image Matting) ஆகிய அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன.

பேட்டரி விஷயத்தில் இந்த ரியல்மி மாடல் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. இதில் 7000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்ய 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. மேலும், ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங் வசதிகளும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, கேமிங் விளையாடும்போது பைபாஸ் சார்ஜிங் வசதி பயனுள்ளதாக இருக்கும்.

மற்ற அம்சங்களைப் பொறுத்தவரை, பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர், டைப்-சி சார்ஜிங் போர்ட் மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் ஆகியவை இதில் கொடுக்கப்பட்டுள்ளன. 8.4 எம்எம் தடிமன் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 212 கிராம் எடை உடன் வருகிறது. எனவே, பெரிய பேட்டரி கொண்ட மாடலை விரும்புபவர்கள் இதன் பேட்டரி மற்றும் சார்ஜிங் அம்சங்களைக் கவனிக்கலாம்.

டஸ்ட் மற்றும் வாட்டர் ஸ்பிளாஷ்களில் இருந்து புரொடெக்சன் வழங்கும் வகையில் IP64 ரேட்டிங் இதில் உள்ளது. மேலும், MIL-STD-810H சர்டிபிகேஷனும் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த ரேட்டிங் மற்றும் சர்டிபிகேஷன் இருப்பதால் தண்ணீரில் மூழ்கடிப்பது அல்லது அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் சூழல்களில் பயன்படுத்துவது பாதுகாப்பானதாக இருக்காது.

ஓஎஸ் பக்கம் பார்க்கையில், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) அடிப்படையிலான ரியல்மி யுஐ 7.0 (realme UI 7.0) வழங்கப்பட்டுள்ளது. கேமராவைப் பொறுத்தவரை, பின்புறத்தில் 13 எம்பி மெயின் கேமரா மற்றும் செகண்டரி கேமரா இடம்பெற்றுள்ளன. முன்பக்கத்தில் செல்பீ எடுப்பதற்கும், வீடியோ கால்கள் மேற்கொள்வதற்கும் 5 எம்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

கடைசியாக, இந்த ஸ்மார்ட்போன் மொசைக் கிரீன் (Mosaic Green), மொசைக் ப்ளூ (Mosaic Blue) ஆகிய இரண்டு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பெரிய பேட்டரி, அதிக ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே மற்றும் ஏஐ இமேஜிங் பீச்சர்கள் ஆகியவற்றை ஒரே ஸ்மார்ட்போனில் எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த ரியல்மி பி4 லைட் 5ஜி மாடலின் அம்சங்கள் கவனிக்கத்தக்கதாக உள்ளன.

Best Mobiles in India

English summary
Realme P4 Lite 5G With 4GB RAM Available At Rs 15999 in Flipkart Big Billion Days Sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X